Thursday 23 July 2020

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி...!!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி...!!!
இன்று புனேயில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார்.
நிகழ்ச்சியில் சமூக இடைவெளி உறுதி செய்வதற்காக, 150 அழைப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடிக்கல் நாட்டும் முன், ராமர் மற்றும் ஹனுமான் காரி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்வார். அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க அனைத்து முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த அறக்கட்டளை கூட்டத்தில் ஆகஸ்ட் 3 முதல் 5-ம் தேதி வரை கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 3 நாட்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.
தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி உட்பட 50 முக்கிய பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவின்போது கருவறை அமையும் இடத்தில் வெள்ளியால் ஆன 5 செங்கல்கள் பதிக்கப்படும். இந்து வேதத்தில் 5 கோள்களை குறிக்கும் வகையில் இந்த 5 செங்கல்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், 40 கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன பிரம்மாண்ட அடிக்கல் நாட்டப்படும்.
கோயில் கர்ப்ப கிரகம் எண்கோண வடிவில் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
வடஇந்திய விஷ்ணு கோயில்களைப் போன்ற வடிவில் கோயில் அமைக்கப்பட உள்ளது. 38 ஆயிரம் சதுர அடியில் கோயில் அமைக்கப்படும் என முன்பு கூறப்பட்டு வந்தது. தற்போது 76 ஆயிரம் முதல் 84 ஆயிரம் சதுர அடி வரை பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாஸ் வெள்ளி செங்கல் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். இந்த நிலையில் இந்திய தங்க சங்கம் சார்பில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக 34 கிலோ எடையில் வெள்ளி செங்கல் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அயோத்தியில், ஆகஸ்ட் 5-ம் தேதி, காலை, 11:00 மணி முதல் மதியம், 1:10 மணி வரை, பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நேரம் ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஜெய் ஸ்ரீராம்..

No comments:

Post a Comment