Tuesday 28 July 2020

பூமி பூஜை...ராமரின் தாய் கவுசல்யா பிறந்த ஊரின் மண்ணை சுமந்து...800 கி.மீ. நடந்தே செல்லும் இஸ்லாமியர்..

அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சுமார் 800 கி. மீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சந்த்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹம்மது ஃபைஸ் கான். சந்த்குரி கிராமத்தில்தான் கடவுள் ஸ்ரீராமரின் தாய் கவுசல்யா தேவி பிறந்ததாக இதிகாசங்களில் கூறப்பட்டு இருக்கிறது. ஆதலால், தன் கிராமத்தின் மணலை எடுத்துக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
தற்போது மத்தியப்பிரதேசத்தில் அனுப்பூர் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அயோத்தியில் பூமி பூஜை செய்யும்போது அவர் எடுத்துச் செல்லும் சந்த்குரி கிராமத்தின் மணல் அந்த இடத்தில் போடப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலும் மொஹம்மது கூறுகையில், ''எனது முன்னோர் இந்துக்கள். நான் மதத்தால், பெயரால் முஸ்லிம் ஆக இருந்தாலும்,மனதால் ராமர் பக்தராக இருந்து வருகிறேன். என்னுடைய மூதாதையர்களின் மூல வேரை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இந்துக்களாகதான் இருப்பார்கள். அவர்களது பெயர் ராம்லால் அல்லது ஷ்யாம்லால் ஆகதான் இருக்கும்.
இந்திய கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவ ஆலயங்களுக்கு சென்றாலும்,இந்திய இஸ்லாமியர்கள் மசூதிக்கு சென்றாலும், முன்பு பிறப்பால் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்து இருப்போம்.
அனைவருடைய முக்கிய மூதாதையர் கடவுள் ராமர்தான். ஒருவருக்கு சரியான பார்வை இருக்குமானால், இந்தியாவின் அதிபதி ராமர் என்றுதான் கருத வேண்டும் என்று பாகிஸ்தான் தேசிய கவிஞர் அல்லாமா இக்பால் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்தான், நான் சந்த்குரியில் இருந்து மணல் எடுத்துக் கொண்டு அயோத்தி சென்று கொண்டு இருக்கிறேன்'' என்கிறார்.
இவர் மேற்கொள்ளும் நீண்ட நடை பயணம் முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோல் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இதற்கு முன்பு 15,000 கி. மீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டு பல்வேறு கோயில்களுக்கு சென்றுள்ளார். நடைபயணத்தின்போது பல்வேறு கோயில்களில் தங்கிச் சென்றுள்ளார். அப்போது எல்லாம் யாரும் தன்னை எதுவும் கூறியதில்லை என்கிறார் மொஹம்மது.
இப்படியும் ஒருவர்..?பூமி பூஜை...ராமரின் தாய் கவுசல்யா பிறந்த ஊரின் மண்ணை சுமந்து...800 கி.மீ. நடந்தே செல்லும் இஸ்லாமியர்..

இப்படியும் ஒருவர்..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment