Thursday 23 July 2020

உண்மையும் பெண்மையும்...

உண்மையும் பெண்மையும்...
வேத காலத்தில் பெண்கள்..
வேத காலத்தில் குறிப்பாக ரிக் வேத காலத்திய சமுதாய அமைப்பில் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்று வாழ்ந்துள்ளார்கள். அப்போது பெண் கல்வி மிகவும் ஏற்றம் பெற்றிருந்தது. அன்றைய பெண் கல்வியில் வேதப் பயிற்சியும், நுண்கலைப் படிப்பும், போர் விஞ்ஞானமும் இடம் பெற்றிருந்தன.
உபநிடத காலத்தில் யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயியும், ஜனகனுடைய அரசவையில், யாக்ஞவல்கியருடன் தத்துவச் சொற்போரில் வித்தகம் காட்டிய கார்க்கி வாசக்னவியும், பெண்களின் கல்வி முதிர்ச்சிக்கு அணிகலன்களாய்த் திகழ்ந்தார்கள்.
வேத காலத்தில் பல பெண் கவிஞர்களின் பாடல்கள் ரிக் வேதத்திலும், மூன்று பெண் கவிஞர்களின் பாடல்கள் அதர்வன வேதத்திலும் இடம் பெற்று இருக்கின்றன.
ரிக் வேத காலத்தில் இருபது பெண் கவிஞர்கள் இருந்ததாக, "ஆர்ஷானுக்ரமணி' என்ற நூல் குறிப்பிடுகிறது.
வேத காலத்தில் இருபத்தேழு - பெண் கவிஞர்கள் இருந்ததாக, "ப்ருஹத்தேவதா' என்ற நூல் கூறுகிறது.
வேதங்கள் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வேத ரிஷிகளின் கலைக் களஞ்சியத்தை உருவாக்கிய மூதறிஞர் கா. ஸ்ரீ.ஸ்ரீ - தயாரித்தளித்த ரிக் வேதப் பெண் கவிஞர்களின் பட்டியலில் 24- பெண் கவிஞர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ராதா குமுத முகர்ஜி என்ற பேரறிஞர் தாம் எழுதிய "இந்தியப் பெண்கள்' என்ற நூலில், நோதா, அக்ரிஷ்ட பாஷா, சிகாத நிவாவரி, கம்பாய்னா என்ற நான்கு பெண் கவிஞர்களின் பாடல்கள் சாம வேதத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேத காலத்தில் தலைவன் வேள்வி செய்யும்போது தலைவியும் உடனிருப்பாள். மந்திரத்திலாதல், சுரத்திலாதல், தலைவன் ஏதேனும் பிழை நிகழ்த்துவானேல், உடனே திருத்தமாகத் தலைவி அதைச் சொல்லி ஒழுங்கு செய்வது வழக்கம். இதனால் ஆண் மக்களைப் போலவே பெண்மக்களும் கல்வியிலும், வேதப் பயிற்சியிலும் சிறந்து, பெண்ணுரிமையைப் போற்றி வளர்த்தார்கள் என்று பேரறிஞர் திரு.வி.க கூறுகிறார்.
சங்க காலப் பெண் கவிஞர்கள்,
மராத்தி சக்குபாய்,
ஜானாபாய்
தமிழ் ஆண்டாள்,
காரைக்கால் அம்மையார்
ராஜஸ்தான் மீராபாய்
கர்நாடகா அக்கா மகாதேவி
இந்தி மகாதேவி வர்மா
மலையாளம் லலிதாம்பிகா அந்தரஜ்னம்
வங்கம் ஆஷாபூர்ணதேவி
ஆகியோர் சங்க கால பெண் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் காலத்தில் பக்தி இலக்கியங்கள் பெரும் வரவேற்பு பெற்றமையால், இவர்களும் பெரும் பக்தி இலக்கியப் பாடல்களைப் புனைந்துள்ளார்கள்.
தமிழ் கவிஞர்கள்;
ஔவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர் சங்க காலப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இறைக் கவிதைகள் பல புனையும் போதும் அதில் சமூகம் சார்ந்த கவிதைகளும், பெண்ணியம் சார்ந்த கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர அந்தக் காலத்தில் அரசாண்ட அரசிகள், கவிதை பாடாமல் புகழ் ஏணியின் உ ச்சியைத் தொட்ட பெண்மணிகள் என்று பட்டியலிட்டால் அது இரு நூற்றுக்கும் மேலாகப் போய்விடும் . வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில் ஆண்ட ஸ்த்ரீ ராஜ்ய அரசிகள் பற்றி எல்லா பழைய நூல்களும் குறிப்பிடுகின்றன.
உலகில் வேறு எந்த நாட்டிலும் பழங்காலத்தில் இவ்வளவு பெண் அறிவாளிகள் இருந்ததாக கிரேக்க, பாபிலோனிய, எகிப்திய வரலாறுகளில் இல்லை. அதிலும் குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கு விரல்விட்டு எண்ணிவிடலாம்.
உண்மை இப்படி இருக்கும் போது,பெண் விடுதலையும்,பெண்கல்வியும்,பெரியாரும்,கலைஞரும்தான் கொண்டு வந்ததாக கூறுவது எவ்வளவு அயோக்கியதனம்..?
நமது பள்ளி பாடநூல்களில் மேலே குறிப்பிட்டுள்ள வேதகாலத்திலேயே நம் மதத்தில் பெண் கவிஞர்கள்,அறிஞர்கள், அரசாண்ட அரசிகள் பற்றிய உண்மையை பதிவு செய்தால்தானே நம் வருங்கால சந்ததிகள் தன்னம்பிக்கையோடு வளர்வார்கள். நமது பாட நூல்கள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
ஒரு நாடு முன்னோக்கி வேகமாக நடை போட வேண்டுமானால், அது தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பதால் மட்டுமே சாத்தியம் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது தனது வரலாற்றை மறக்கும்(மறைக்கும்) நாடு வளர்ச்சியை எட்டாது என்பது அதன் அர்த்தம்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment