Monday 20 July 2020

நீதித்துறையின் மாண்பு.

நீதித்துறையின் மாண்பு.
*இந்தியாவில் இப்படி ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியா...?
*🦚உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, _உயர்திரு.மெகர் சந்த் மகாஜன்_ என்பவர், டார்ஜிலிங் என்ற இடத்திற்கு அரசு வாகனத்தில் செல்லாமல், தனது சொந்த காரில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.*
*👉அங்கே அவர் ஓட்டிச் சென்ற கார், அங்கிருந்த போக்குவரத்து சிக்னலைக் முற்றிலும் கவனிக்காமல் விதியை மீறி சென்றுவிட்டார்.*
*👉பின்னர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவரை இடையில் வழிமறித்து, அவருடைய தவறை சுட்டிக்காட்டுகின்றார்.*
*👉தன்னுடைய தவறை உணர்ந்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி, போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் மன்னிப்புக் கோருகின்றார்.*
*👉ஆனால் போக்குவரத்து காவல் ஆய்வாளரோ...? அதனை ஏற்க மறுத்து அபராதத்தொகையை விதிக்கின்றார்.*
*👉பின்னர், அபராதத்தொகை கட்டுவதாகவும் ஒப்புக்கொண்டு, போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம், நீதிபதி திரு.மகாஜன் சம்மதிக்கின்றார்.*
*👉ஆனால், அதற்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள்...? உங்களது விதிமீறலுக்கான தொகையை, என்னிடம் கட்ட வேண்டாம்....?*
*👉மாவட்டத் தலைமை நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கே உங்களுக்குரிய அபராதத் தொகையைக் கட்டுமாறுகூறி, ஒரு நீண்ட துண்டுச்சீட்டின் ரசீதைக் கொடுக்கின்றார்.*
*👉தான் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி என்று கூட காட்டிக்கொள்ளாமல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சொன்னபடியே, நீதிபதி திரு.மகாஜன், மறுநாள் மாவட்ட நீதிமன்றத்தின் கூண்டின்மேல் ஏறி நின்றார்.*
*👉``உங்களது பெயர் என்ன?`` என்று அங்கிருந்த மாவட்ட தலைமை மாஜிஸ்ட்ரேட் கேட்க...? "மகாஜன்'' என்கின்றார்.*
*👉``என்ன வேலை பார்க்கிறீர்கள்?`` என்று மாவட்ட நீதிபதி கேட்கின்றார்...?*
*👉 அதற்கு அவர் சற்றும் தயங்காமல் தான்....? _"சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கின்றேன்"_ என்று தயங்காமல் சொல்கின்றார்.*
*👉உடனே அந்த மாவட்ட மாஜிஸ்திரேட் _"மை லார்டு"_ எனக் கூறியபடியே பதறிப்போய், ஓடிவந்து திரு.மகாஜனை வணங்கினார்.*
*👉அங்கிருந்த வழக்குறைஞர்கள் , மற்றும் காவலர்கள் என அனைவரும் ஒரு நொடியில் மிரண்டே போனார்கள்.*
*👉உச்சநீதிமன்ற நீதிபதி அப்போது கூறினார்...? தயவுசெய்து அனைவரும் உட்காருங்கள்; உங்களது பணியை ஒளிவு மறைவின்றி, சிறப்பாக செய்யுங்கள் என்றார் திரு.மகாஜன்.*
*👉உடனே அங்கிருந்த மாவட்ட நீதிபதி கூறினார்...?*
*👉"முதன்முறையாக மிகச்சிறிய தவறு செய்தவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. ஆதலால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட்.*
*👉திரு.மகாஜன் அவர்கள், இருகரம் கூப்பி, _நன்றி சொன்ன பின்னரே_ வெளியில் வந்தார் மகாஜன்.*
*👉தனக்கான பதவியை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல், அனைத்து நிலைகளிலும் பொறுமையும், தன்னுடைய பணிவையும் வெளிப்படுத்திய உயர்திரு.மகாஜன் அவர்களை அங்கிருந்தோர் அனைவரும் மனதார பாராட்டி, வாழ்த்தி வணங்கினர்.*

No comments:

Post a Comment