Thursday 30 July 2020

மொத்தமா மண் அள்ளிப்போடுவது, இதுதானோ..

மொத்தமா மண் அள்ளிப்போடுவது, இதுதானோ..
தவறாக வழிநடத்தப்படும் எடப்பாடி பழனிச்சாமியால் தமிழ்நாட்டில் எந்த தொழிலும் முழுமையாக நடைபெறப்போவதில்லை.
இப்போதைக்கு எல்லாம் அரைகுறை.. நாலு பேரை வெச்சு வேலை வாங்க ஆயிரத்தெட்டு ரூல்ஸ். இதுக்கு எதுக்குடா செலவு பண்ணி நஷ்டப்படணும்னு பல தொழில்கள் நிறுத்தப்பட்டிருக்கு..
இதுவரை பொறுமைகாட்டிய உற்பத்தி துறையினர் உள்ளிட்டோர் கடுப்புக்கு போயிருப்பதை விரைவில் காணலாம்..
இன்னொரு பக்கம்...
வாகன ஓட்டுநர்கள்,
கட்டிட தொழிலாளர்கள்
தங்கும் விடுதி பணியாளர்கள்
சமையல்காரர்கள்
புகைப்பட கலைஞர்கள்
சுற்றுலாவை நம்பியிருப்பவர்கள்
இதுமாதிரி குறைந்தபட்சம் 50 தரப்பினர் இருப்பார்கள்..
இவர்களெல்லாம் என்ன கதி ஆனார்கள் என்று யோசித்தார்களா?
ஒரு, லாயரே தெருத்தெருவா டீ விக்கற அளவுக்கு நிலைமை..
ஆரம்பத்தில் நிலைமை நன்றாகத்தான் இருந்தது. இதே எடப்பாடி பழனிச்சாமிக்கு, சென்னையில் உடனே லாக் டவுனுக்குள் லாக் டவுன் என்று யாரோ ஒருத்தர் ஐடியா கொடுத்தார்.
அதை நம்பி, அவகாசமே கொடுக்காமல் சென்னையில் நாலு நாள் லாக் டவுன்.. விளைவு, மொத்தபேரும் கோயம்பேட்டிற்கு ஓடினார்கள்.
அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. தொற்று பரவல் வேகமானது. கோயம்பேட்டிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பறந்தார்கள் தமிழகம் முழுவதும் பரவியது.. லாக்டௌவுனுக்குள் லாக்டௌன் சாதித்த லட்சணம் அதுதான். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதை...
முதலமைச்சர் பழனிச்சாமி தன் தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக்கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழகத்தின் தலையில் கொட்டிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனை..

No comments:

Post a Comment