Friday 31 July 2020

பணிச்சுமையாம் மன அழுத்தமாம்...

பணிச்சுமையாம் மன அழுத்தமாம்...
கடுமையான பணி சுமையை தாங்க முடியவில்லை மன அழுத்தத்தை போக்கவே சொப்னா வீட்டிற்கு சென்றேன்: என்ஐஏ.விடம் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம்..
திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சொப்னாவுடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்து என்ஐஏவிடம் சிவசங்கர் கூறியதாவது: தலைமை செயலகத்தில் பணி முடிய பெரும்பாலும் நள்ளிரவு ஆகிவிடும். அப்போது நான் கடும் மன அழுத்தத்தில் இருப்பேன்.
இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே சொப்னாவை பார்க்க அடிக்கடி சென்று வந்தேன். இதற்காகத்தான் தலைமை செயலகத்துக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்தேன்.
சொப்னாவின் வீட்டுக்கு சென்று வருவதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைந்தது. எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. சொப்னா வீட்டில் நடக்கும் மது விருந்திலும் கலந்துகொள்வேன். இதுவும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்த விருந்தில் வைத்து தான் சரித், சந்தீப்நாயருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு முதலில் சொப்னாவை மட்டும் தான் தெரியும்.
அவரது கணவர் எனக்கு உறவினர் ஆவார். கேரள அரசில் எனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி என்னை அந்த கும்பல் சதியில் சிக்க வைத்து விட்டது. அதை புரிந்துகொள்வதில் நான் தவறு செய்துவிட்டேன். சொப்னாவுடன் வந்த கும்பல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டது குறித்து எதுவும் தெரியாது. நான் தேச விரோத செயல்கள் எதற்கும் துணை போகவில்லை. என்னை வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது. சொப்னாவுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்னைகள் ஏற்பட்டது. இவ்வாறு அவன் கூறி உள்ளான்.
குறிப்பு;இவன் எல்லாம் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி.?இவனது நடவடிக்கைகள் முதல்வருக்கு தெரியாமல் இருந்து இருக்குமா..?முதல்வருக்கும் பணிசுமையும் மன அழுத்தமும் இல்லாமலா இருந்து இருக்கும்..?
"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான்,ஐயோவென்று போவான்."

No comments:

Post a Comment