Tuesday 28 July 2020

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிக் கொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியப்போகின்றது, இந்தியாவின் ஆறெல்லாம் வற்றி நாமெல்லாம் சாகப்போகின்றோம் என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டது ஒரு கும்பல்.

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிக் கொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியப்போகின்றது, இந்தியாவின் ஆறெல்லாம் வற்றி நாமெல்லாம் சாகப்போகின்றோம் என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டது ஒரு கும்பல்.
இதைக் கண்டு மண்கட்டையில் குந்தவைத்து கட்டைபீடி குடித்துக் கொண்டிருந்த வேலையற்ற கூட்டம், மரத்தடியில் மல்லாக்கக் கிடந்த கூட்டமெல்லாம் அய்யய்யோ பாஜக இந்திய சுற்றுச் சூழலை ஒழிக்கின்றது எனக் கிளம்பிவிட்டது
உண்மையில் இது 2006 காங்கிரஸ் அரசின் வரைவு(draft), பின் சிலசக்திகளின் எதிர்ப்பால் அதைப் பரணில் போட்டது காங்கிரஸ், இப்பொழுது அதில் சில திருத்தங்களைச் செய்கின்றது மோடி அரசு அவ்வளவுதான்.
இந்தச் சட்டம் என்ன சொல்கின்றது?
மத்திய அரசு,
கடல் வனம் மற்றும் இதர விஷயங்களைத் தன் கட்டுபாட்டில் எடுக்கின்றது , இனி இந்த பசுமைத் தீர்ப்பாயம் போன்ற இம்சைகள் எல்லாமிருக்காது
ஆனால் மாநில அரசின் உரிமைகளை மீறிமத்திய அரசு ஒருநடவடிக்கையும் எடுக்காது, மாநில அரசின் முழு சம்மதத்துடனே மத்திய அரசு அனுமதி வழங்கும்
சுருக்கமாகச் சொன்னால் சட்டம்சொல்லும் திட்டம் என்ன தெரியுமா?
சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவணங்களை நமது தேசம் வரவேற்கின்றது, இந்தியா முழுக்க பெரும்தொழில் நிறுவணங்கள் வர இருக்கின்றன, இந்நிலையில் தொழில் அனுமதிக்கு நீண்டகாலம் கோர முடியாது, கோரினால் நிறுவணங்கள் இந்தியாவினை விட்டுச் சென்றுவிடும். இந்தச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளால் ஏற்படும் தாமதங்களைக் (bureaucratic delays) குறைக்கக் கொண்டுவரப்படும் சீர்திருத்தம்.
இதனால் சுற்றுச்சூழல் சட்டங்கள் கொஞ்சம் எளிமைப்படுத்தப் படுகின்றன, வேறொன்றுமல்ல. இதனால் வனம் அழியும் , ஆறு வற்றும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான பொய்
சரி இந்தச் சட்டம் வந்தால் என்னாகும்?
சட்டம் வந்தால் தொழில் தொடங்குதல் எளிதாகும், எக்காரணம் கொண்டும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியிலோ இல்லை மேட்டூர் அணையின் நடுவிலோ தொழில் நிறுவணம் வரப்போவதில்லை எது பொருத்தமான இடமோ அங்குதான் வரும்
முன்பு காமராஜர் திருச்சி திருவெறும்பூருக்கு பெல்(BHEL) கொண்டுவந்தார் அல்லவா? அப்படி
இந்தச் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?
இச்சட்டம் வந்தால் தொழில் நிறுவணங்களுக்கு அனுமதி எனும்பெயரில் சம்பாதிக்க முடியாது, ஸ்டெர்லைட் போல கட்சிகள் அள்ளமுடியாது, வசூல் நடக்காது
அடுத்து கடற்கரை மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் பொழுது தாதுமணல் அள்ள முடியாது, கடற்கரையோரக் கடத்தல் நடக்காது
கானகம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது அங்கும் கடத்தல் பதுக்கல் நக்சலைட் நடமாட்டம் ஆகியவை இருக்காது
குறிப்பாக இந்த கல்குவாரி, மண்குவாரி, கிரானைட் குவாரி இவை எல்லாம் கடும் கண்காணிப்புக்குள் வரும், இவை எல்லாம் இல்லையென்றால் மாநில கட்சிகள் கதை முடிந்துவிடும்
இதனால்தான் அய்யய்யோ....நாட்டுக்கு ஆபத்து என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது, ஆபத்து நாட்டுக்கல்ல கட்சிக்காரன் வீட்டுக்கு.
இச்சட்டம் நாட்டுக்கு தொழில்வளர அவசியமானது.
எதெல்லாம் இங்கு கமிஷன் கலெக்சன் என மாநில கட்சிகளுக்கு வழிவைத்ததோ அதில் கைவைக்கின்றது மத்திய அரசு
அவ்வளவுதான் விஷயம்
இங்கே ஆற்றுமணலைத் திருடியபொழுது வராத சத்தம், கிராணைட் குவாரி என குளமும் வயலும் கொள்ளை போகும் பொழுது வராத சத்தம்
வறண்ட ராதாபுரம் பக்கம் கல்குவாரிக்கு அனுமதி என பூமியினைத் தோண்டி கல்லெடுக்க அனுமதி கொடுத்து இன்று திமுக அதிமுக பினாமிகள் மாபெரும் கடல் அளவு பள்ளம் தோண்டி அப்பக்கத்தையே கதற வைத்திருக்கும் பொழுது வராத சத்தம்
கல்குவாரி, தாதுமணல் என எங்கெல்லாமோ சுரண்டி சுற்றுசூழலையே அழித்தபொழுது வராத சத்தம்..
மரம் வெட்டி கட்சியும், மரம் வெட்டி வீரப்பனையுமே வாழ்க என கோஷம் போடும்பொழுது வராத சத்தம்..
தாமிரபரணியே தனியார் ஒருவனுக்கு என தாரை வார்க்கப்பட்டுப் பாய்ந்தபொழுது வராத சத்தம்
நாடெல்லாம் குடிநீர்க் கம்பெனிகள் ஆற்றையும் அணையினையும் நிலத்தடி நீரினையும் உறிஞ்சி விற்கும் பொழுது வராத சத்தம்..
திருப்பூர் சாயப் பட்டறை சிக்கல் உச்சத்தில் இருந்தபொழுது வராத சத்தம்..
நில ஆக்கிரமிப்பு மிக உச்சத்தில் இருந்தபொழுது வராத சத்தம்..
ஆற்றிலும் காட்டிலும் மலையும் மண்ணும் களவுபோய் ஒருதுளிநீருக்கு ஏங்கும்பொழுது வராத சத்தம், குளத்து வரப்புகளெல்லாம் செங்கலுக்கும், குளத்து பனைகளெல்லாம் சூளைக்குமாய் வெட்டிக் கடத்தப் பட்டுக் குளங்களும் தனியாருக்கு பட்டா என்றான பின்னும் வராத சத்தம்..
அட வாய்க்கால்களும் வரப்புகளும் ஆக்கிரமிக்கப் பட்டு ஏரிகளே காணாமலாக்கச் செய்த பின்னும் வராத சத்தம்..
மத்தியரசு ஒரு சட்டம் கொண்டுவந்தவுடன் வருகின்றதென்றால் இதன் பின்னணியில் இருப்பவர் யாரென புரிந்துகொள்ளல் நலம்
அதுவும் காங்கிரஸ் ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது தேசத்தின் நலன் என சொல்லியாதெரிய வேண்டும்?
காங்கிரஸ் சொன்னபடியெல்லாம் நிலமை இருந்தால்,
காஷ்மீர் மீண்டிருக்குமா?
சீனா பின்வாங்கியிருக்குமா?
இல்லை இன்னும் பெரும் நன்மையெல்லாம் விளைந்திருக்குமா?
அந்த ரெட் கலர் ஆண்டி யாரெனத் தெரியவில்லை, எவனோ, ஒரு அப்பாவிப் பெண்ணைப் பேசவைத்துப் பின்னணி இசையெல்லாம் கோர்த்துப் பரப்பிவிட்டிருக்கின்றான்
அம்மணி வசமாகச் சிக்கிவிட்டது, இனி அவனவன் கேட்கும் கேள்விக்கு அது பதிலளிக்கமுடியாமல் ஓடி ஓளியப் போகின்றது, கொரோனா நேரம் என்பதால் மாஸ்க் போட்டு அது தப்பிக்கலாம்
இந்த சுற்றுச் சூழல் சட்டத் திருத்தம் மிக மிக அவசியமானது, நாடு புத்துயிர் பெறும் நேரம் உலக கம்பெனிகளை தன்பக்கம் இழுக்கும் நேரம் அவர்கள் தொழில்தொடங்க சில அவசர வசதிகளை செய்துகொடுத்தல் மகா அவசியம் அதற்குத்தான் இந்தச் சட்டம்
அதுவும் மாநில அரசு மறுக்கும் இடங்களிலோ, பசுமைப் பரப்பு போகும் இடங்களிலோ நிச்சயம் இச்சட்டம் பாயாது
மாறாக இச்சட்டம் தொழில்வளாகமெல்லாம் மரம் வளர்த்து இன்னும் அதிகப் பசுமைப் பரப்பு பெருகவும் காக்கவும் வழிவகை செய்கின்றது
இச்சட்டத்தை நாம்வரவேற்கின்றோம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தேசத்துக்கு சாதகமாக இருக்கும்பொழுது இங்கு தொழில்வளர இது மகா அவசியம்
நம்மைப் பின்பற்றுபவர்களுக்குப் புரியும். நாம் சிலமாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு சட்டம் வரும், இங்கு ஏராளமான தொழில்வாய்ப்புகள் வரும்பொழுது அரசு அதற்கு வாய்பளிக்க தொழிலாளர் சட்டம் மற்றும் இம்சை பிடித்த சுற்றுச் சூழல் சட்டத்தைத் திருத்தும் என சொல்லியிருந்தோம்
உங்களில் சிலருக்கு அது நினைவிருக்கலாம், அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றதே அன்றி வேறல்ல..
இந்தப் போலிப் போராளிகளைப் பின் தள்ளுங்கள், இதெல்லாம் சீன கைக்கூலிகள் இந்திய தேசிய எதிரிகளின் வழக்கமான விளையாட்டு அன்றி வேறல்ல..
இந்த சிகப்பு சேலை ஆன்ட்டி தமிழகம் முழுக்கச் சுற்றிவரட்டும் இங்கு நடந்திருக்கும் மலை மணல் கிராணைட் தாதுமணல் அத்துமீறி ஆக்கிரமிக்கபட்ட குளம் வாய்க்கால்,நிலத்தடி நீரை1000 அடிக்கு கீழ் கொண்டு சென்ற தரைகீழ் கல்குவாரிகள்
செங்கல் மணல் திருட்டு அதனால் நடந்த பனைமர அழிவு, தாதுமணலால் நடந்த கடற்கரைஅழிவு என ஏகப்பட்ட விஷயங்களைப் பார்க்கட்டும்
அதன் பின் பேசட்டும்,
ஏம்மா செய்வீர்கள் அல்லவா?
சரி, அதற்கு முன் ஒரு கேள்வி
நீங்கள் யார்?
நீங்கள் வசித்த கிரகம் எது?
எப்படி பூமிக்கு அதுவும் தமிழ்நாட்டுக்கு திடீரென வந்தீர்கள்?
30 வருடமாக தமிழகம் மிக மோசமாக சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தபொழுது எங்கே இருந்தீர்கள்?
போன்ற கேள்விகள் இப்பொழுது எழுகின்றதல்லவா?
நன்றி நண்பர் திரு Stanley Rajan அவர்கள்

No comments:

Post a Comment