Tuesday 28 July 2020

கந்தனுக்கு அரோகரா, பெருமாளுக்கு கோவிந்தா..

கந்தனுக்கு அரோகரா, பெருமாளுக்கு கோவிந்தா..
உயிரைக்காப்பது எவ்வளவு முக்கியமோ, அதற்கு நிகரானது உயிர் பிழைத்தவன் தொடர்ந்து வாழ அவனுக்கு வேண்டிய உணவும் பிற தேவைகளும்-.
அந்த தேவைகளை எட்ட பொருளாதாரம் தேவை. அதை எட்டிப்பிடிக்க வேலையும் அதை செய்துமுடிக்க ஆரோக்கியமான மனநிலையும் அவசியம்..
பின்னாடி விருந்தே வைக்கிறேன் என்று சொல்லி எல்லாவற்றோடு சேர்த்து எல்லோரையும் காலி செய்துவிடாதீர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே
என்ன விருந்து வைத்தாலும், சடலங்கள் எழுந்து வராது..செத்தவன் வாயில் வைத்த வெத்திலை பாக்கால் எவனுக்கும் பிரயோஜனம் இல்லை
இப்போதுள்ள ஊரடங்கு நிலையே ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகும் தொடர்ந்தால் மக்களின் மனதில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்..
ஒரே இடத்தில் இல்லாமல் மாவட்டம் மாவட்டமாக நீங்கள் மட்டும் சுற்றுப்பயணம் போவதால், அடைக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் வலி உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்..
இ- பாஸை ஒழித்துகட்டுவது உட்பட மேலும் பல தளர்வுகளை தமிழ்க அரசு அறிவிக்காவிட்டால்,
மேலேபோய் முதல்வரியை படியுங்கள்..

No comments:

Post a Comment