Tuesday 20 September 2022

சொல்லும் செயலும் அழகானது.

 சொல்லும் செயலும் அழகானது.

மெளனமும் சிரிப்பும் சக்தி வாய்ந்தவைகள்.
மெளனம் நிறைய பிரச்சினைகளைக் குறைத்து விடும்
சிரிப்பு நிறைய பிரச்சினைகளைத் தீர்த்து விடும்.
சொல் வீரராக இருப்பதைக் காட்டிலும்
செயல் வீரராக இருப்பது சிறந்தது.
எந்தத் தொழிலும் இழிவில்லை
தொழில் எதுவும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு.
உலகத்தை வெல்வதை விட
சுயநலத்தை வெல்வதே வெற்றி.
காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை
அது நம் மனதை பக்குவப்படுத்துகிறது
அவ்வளவு தான்.
எதையும் கற்றுக்கொள்வது தான் நல்லதே தவிர
கற்றுக் *கொல்வது* அல்ல.
நாம் எதைத் தொடர்ந்து செய்கிறோமோ
அதுவாகவே ஆகிறோம்.
எனவே திறமை என்பது ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்
காலம் கைகூடும்.
உள்ளத்தின் அழகென்பது
சொல்லும் செயலும் தான்.
இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் வீரம்
அசாத்திய திறமைகளை
தனக்குத்தானே அறியச் செய்து விடும்.
சந்தோசத்தை தொடராதே
ஆனால்
சந்தோசமாயிருக்க சர்வ காலமும் தயாராயிரு.
ஆசை தவறில்லை
அடுத்தவர் பொருள் மீது ஆசை தான் தவறு.
கழுகைப் பிடிக்கத் தெரிந்தாலும்
இங்கே
காக்காப்பிடிக்க தெரிந்தவனுக்கே வாழ்க்கை.
தானாக எதுவும் மாறாது.
மாற்றவும் முடியாது என்கிற புரிதலே முதிர்ச்சி.
முறிவு என்று ஆன பின்
புரிய வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை.
பிரிய வேண்டும் என்றே பேசுகிறார்கள்.
நமக்குச் சரியெனப்படாத ஒன்றைத் தொடர்வது.
மற்றவர்களின் நிழலில் ஓய்வு எடுத்தலைப் போன்றதாகும்.
கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல
பயன்படுத்தி வீட்டு
என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் எனச் சொல்பவர்கள்.
வாழை இலையை தூக்கி எறிந்ததை நினைப்பதில்லை.

No comments:

Post a Comment