Monday 12 September 2022

முதல் ஆண்டு பிறந்தநாள் விழா கொல்லங்குடி அழகாபுரி நிதி மேலாண்மையாளர், ரியல் எஸ்டேட், சிட்பண்ட்ஸ் உரிமையாளர் டி. உடையப்பன் - சீதா தம்பதியர் மகன் வழிப் பேரன், எங்கள் தம்பி அலவாக்கோட்டை கே. தணிகைவாசன் - மீனாள் தம்பதியர் மகள் வழிப் பேரன் நாகா அர்ஜுன் - வைஷ்ணவி அன்புக் குழந்தை அம்ருத் விசாகன் முதல் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று நண்பகல் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. அறிவுத்திறன் போட்டி, கலைநிகழ்ச்சிகள் என குதூகலமாக குடும்பங்கள் சந்திப்பாக நடைபெற்ற விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், உழைப்புத் திலகம் மலரகம் சந்திரன், கமலா சந்திரன், நகரத்தார் சங்கத்தின் செயலாளர் ஆர். மெய்யப்பன் குடும்பத்தினர், துணைத் தலைவர் வி வயிரவன் உள்ளனர். மேனாள் நிர்வாகிகள் எம். முருகப்பன் குடும்பத்தினர், அப்பல்லோ ஒய். கார்த்திக் குடும்பத்தினர், ஆர் எம் வயிரவன், வி. சீனிவாசன், வடு. கண்ணன் தம்பதியர், பைனான்ஸ் செல்வம் குடும்பத்தினர், பிஎல். அண்ணாமலை தம்பதியர், ராங்கியம் அண்ணாமலை, அண. பெரியகருப்பன்,சொக்கநாதபுரம் ராம. நாராயணன் , ஆடிட்டர் சோலையப்பன், ஆடிட்டர் பரஞ்ஜோதி, சகானா சத்தியமூர்த்தி தம்பதியர், நா. மெய்யப்பன் குடும்பத்தினர், கீழப்பூங்குடி எஸ். கண்ணப்பன், தமிழ் இசைச் சங்கத்தின் மேலாளர் பழனியப்பன், பில்டர்ஸ் கிங் முத்து விஜயன், நம்பிக்கை நட்சத்திரம் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று குழந்தைச் செல்வத்தை வாழ்த்தினர். அமெரிக்க நடேசன் பாலு சிறப்பு உணவு அருமை. வளரட்டும் தலைமுறை.

 





No comments:

Post a Comment