Monday 19 September 2022

வரம் தான் வாழ்க்கை.

 வரம் தான் வாழ்க்கை.

நமது குறைகளை மற்றவரிடம் சொல்லாமல்
அதைப்பற்றி பெரிதும் கவலைப்படாமல்
சில இடங்களிலிருந்து மெளனமாக அடியெடுத்து வைத்து நகர முடிந்தால்
அவரே அனுபவஸ்தர்.
வாழ்க்கையில் நம் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட
நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்.
தாமரை இலைத் தண்ணீர் போல்
அதிகம் இழையாமல் உறவுகளை கையாளக் கற்றுக்கொண்டாலே போதும்.
வரம் தான் வாழ்க்கை .
விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்பது.
இப்போதைக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே.
நன்றி மறந்து வாழ்வது
நினைவின்றி வாழ்வதற்குச் சமம்.
சில குற்றங்களை மன்னிப்பதாலும்
சில குறைகளை மறப்பதாலும் தான்
இன்னும் பலஉறவுகள் நீடிக்கின்றன.
உங்கள் வாழ்தலில் மகிழ்ச்சி வேண்டுமெனில்.
தேவையானதை தேடிச் செல்லாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் தேவையற்றதை விலக்குங்கள்.
எல்லோரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவன் கிட்ட
கொஞ்சம் பேசிப் பாருங்களேன்.
ஏதாவது துன்பத்தில் போராடிக்கிட்டு இருப்பான்.
நம் எதிர்காலத்தை நாமே உருவாக்குகிறோம்.
அதில் ஏதேனும் தவறானால் அதையே விதி என்கிறோம்.
ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே.
பாறை போல் உட்கார வேண்டாம்
கடிகாரம் போல வேலை செய்யுங்கள்.
இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம்.
நம்பிக்கையை இழக்காதிருந்தால்.
தீமை செய்வதற்கு மட்டும் பயப்படுங்கள்
வேறு எந்தப் பயமும் உங்களுக்கு வேண்டாம்.
புத்திசாலித்தனமும், . தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒத்துப்போகாமல்
வாழ்க்கை நடத்த முடியாது.

No comments:

Post a Comment