Tuesday 13 September 2022

தெளிவாக இருப்போம்.

 தெளிவாக இருப்போம்.

பரிமாறுகிறவர்களால் நிறைந்தது உலகம். அன்பை, நட்பை, துரோகத்தை, வெறுப்பை… ஒவ்வொரு கணமும் எதையாவது ஒன்றைப் பரிமாறிக்கொண்டே இருக்கிறோம். நாமும் பரிமாறப்படுகிறோம். நம் தட்டில் விழும் உணவுக்கேற்பவும் நமது தன்மைக்கேற்பவும் எதிர்வினையாற்றுகிறோம்.
வயிற்றுப் பசிக்கான உணவைப் பரிமாறுகிற சமையல்கார்கூட கூலியைவிடப் பாராட்டையே டிப்ஸாக எதிர்பார்க்கிறபோது, அன்பைப் பரிமாறுகிற மென்மையான உள்ளங்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்கத் தானே செய்யும்.
தன்னை ஆளுமை செய்ய நினைக்கும் மனிதனை சக மனிதன் விரும்பவே மாட்டான்.
நீங்கள் அன்பைக் கொடுத்தீர்கள் என்றால் பதிலுக்கு அன்புதான் கிடைக்கும். மரியாதை ஸ்லோமோஷனில் பின்னால்தான் மெதுவாக வரும். எது வேண்டும்.
எனவே, மரியாதை செய்பவர்கள், பெரும்பாலும் பாசாங்குதான் செய்கிறார்கள். அந்தப் போலிச் செயல்களின் பின்னால் உள்ள அன்பின் சதவீதம் ரொம்பக் குறைவாகவே இருக்கும்.
அன்பு வேண்டுமா போலி மரியாதை வேண்டுமா என்பதில் தெளிவாக இருங்கள்.

No comments:

Post a Comment