Monday 12 September 2022

காமராஜரும் கண்ணதாசனும்!

 காமராஜரும் கண்ணதாசனும்!

1960-ம் ஆண்டு "படிக்காத மேதை" என்ற படத்திற்கு பாடல் எழுதுவதற்கு கண்ணதாசனுக்கு அழைப்பு வந்தது. படத்தினது சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்ட கண்ணதாசன் இந்த சூழ்நிலை காமராஜருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறதே என்று ஒரு பல்லவியை டைரக்டரிடம் எழுதி காட்டினார்.
படித்ததினால் அறிவு பெற்றோர்
ஆயிரம் உண்டு; பாடம்
படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு...
என்பதுதான் அந்த பல்லவி.
மிகவும்
அருமையாக
வந்திருக்கிறது. இதற்கு ஒத்த கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுங்கள் என்று இயக்குனர் சொன்னவுடன் கண்ணதாசன் மிகுந்த உற்சாகமாகி விட்டார். உடனே
கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும்
படிப்பு வேண்டுமா? என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து
விட்டால் துன்பம் தோன்றுமா...?
வாழை மரம் படித்ததில்லை
கனிகொடுக்க மறந்ததா...
வான்முகிலும் கற்றதில்லை...
மழைபொழிய மறந்ததா...
சோலை எல்லாம் கற்றதில்லை
நிழல் கொடுக்க மறந்ததா? -எங்கும் சுதந்திரமாய் பாடி வரும்
குயிலும் பாடம் படித்ததா?
என்று கவிஞர் மடமடவென்று சொல்லிக் கொண்டு போய் பாட்டை முடித்தார். இயக்குனருக்கு முழு திருப்தி. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், இந்தப்பாட்டு மாபெரும் வெற்றியடையப் போகிறது என்று கண்ணதாசன் சொல்ல... அதை அனைவரும் ஆமோதிக்க அதைப்போலவே படமும், பாடலும் அமோக வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து அதே படத்திலே இன்னொரு சூழ்நிலைக்காக எழுதிய பாடலும் காமராஜருடைய குண நலன்களைக்குறிக்கும் பாட்டாக அமைந்தது...
உள்ளதைச் சொல்வேன்
சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும்
கபடம் தெரியாது.
என்ற பாட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கண்ணதாசன் காமராஜரைப் பற்றி என்னமா எழுதியிருக்கிறார் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அதுவே ஊர்முழுக்க பேச்சாக இருந்தது.
நன்றி கவியரசர் கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment