Monday 12 September 2022

கே பி எஸ் ரெஸ்டாரண்ட் கே பி ராமச்சந்திரன் மகள் மணவிழா. வாழிய மணமக்கள். இன்று இரவு மதுரை துவாரகா பேலசில் நடைபெற்ற உழைப்பின் உன்னதம், எங்கள் டி பி கே ரோடு கே பி எஸ் ரெஸ்டாரண்ட் உரிமையாளர், அருமை நண்பர் கே பி. ராமச்சந்திரன் மகள் டாக்டர் ரேவதி பிரியதர்ஷினி - பொறியாளர் என். நிவாஸ் என்ற நல்லமணி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ. மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் மேனாள் அ இ அ தி மு க மாவட்டச் செயலாளர் ராஜாங்கம், த மா கா மூத்த தலைவர் ஒத்தக்கடை ஜெயப்பிரகாஷ், மேனாள் காவல் துறை கண்காணிப்பாளர் குமரவேல், சபரீஸ் ஹோட்டல் சுயம்பு, செந்தூர் ஹோட்டல் அழகர், மூத்த பத்திரிகையாளர் பால்ராஜ் குடும்பத்தினர், ஜெசி ஒபிடி அசோக், ஆடிட்டர் முகமது கான், விமலா பேப்பர் கே. அழகு, சமூக ஆர்வலர் திசைமுத்து குடும்பத்தினர்,ஐராவதநல்லூர் பழனிச்சாமி கோனார் குடும்பத்தினர், உழைப்பாளி மணி உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். இவர்களது குடும்பத்தில் பத்து பேர் சகோதர சகோதரிகள். ஒற்றுமை மற்றும் பெற்றோரைப் போற்றி அரவணைத்துச் செல்லும் உயர்ந்த மனிதர்கள். உழைப்பே முகவரி என கடமை ஆற்றிடும் நண்பர் ராமச்சந்திரன் குடும்பம் வாழியவே. மணமக்கள் பல்லாண்டு வாழ்க.





 

No comments:

Post a Comment