Wednesday 14 September 2022

அமைதியும் மகிழ்ச்சியும்.

 அமைதியும் மகிழ்ச்சியும்.

கு‌ற்ற‌ம் பா‌ர்‌க்‌கி‌ன் சு‌ற்ற‌ம் இ‌ல்லை. ஒ‌வ்வொருவ‌ரிடமு‌ம் கு‌ற்ற‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ந்தா‌ல் உறவுக‌ள் இரு‌க்காது. ம‌ற்றவ‌ர்களை காய‌ப்படு‌த்து‌ம் வா‌ர்‌த்தைகளை ‌பிரயோ‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள். உ‌ங்க‌‌ளிட‌ம் அ‌ன்பை வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். சா‌ட்டையை இ‌ல்லை.
இ‌ந்த பூ‌மியை‌ப் படை‌க்கு‌ம் போது இறைவ‌ன், ம‌னித‌ர்க‌ள் அமை‌தியாகவு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியாகவு‌ம் வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று ஆசை‌ப்ப‌ட்டா‌ன். ஆனா‌ல் அது நட‌க்க‌வி‌ல்லை. இறைவ‌னி‌ன் ஆசையே ‌நிறைவேறாதபோது, ம‌னித‌னி‌ன் ஆசைக‌ள் எ‌ம்மா‌த்‌திர‌ம். எனவே ஆசைக‌ள் அனை‌த்து‌ம் ‌நிறைவே‌று‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ‌வி‌ட்டு‌வி‌‌ட்டு, ல‌ட்‌சிய‌ங்களை அடையு‌ம் வ‌ழி‌யி‌ல் ச‌ெ‌ல்லு‌ங்க‌ள்.
ந‌ல்ல ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
எ‌தி‌ரி எ‌ன்று யாரையு‌ம் எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அவ‌ர்களது செய‌ல் உ‌‌ங்களைத் து‌ன்புறு‌த்‌தினா‌ல் அவ‌ர்களுடனான தொட‌ர்பை குறை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அவ‌ர்களை ப‌ழிவா‌ங்கவோ, த‌ண்டனை அ‌ளி‌க்கவோ முயல வே‌ண்டா‌ம். இதனை கடவு‌ளிட‌ம் ‌வி‌ட்டு‌விடு‌ங்க‌ள்.

No comments:

Post a Comment