Wednesday 14 September 2022

கவனத்தில் கவனம்.

 கவனத்தில் கவனம்.

வெற்றி பெற்றவனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தோல்வி அடைந்தவனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். வெற்றியும், தோல்வியும் அளவீடு தானே தவிர வாழ்க்கைக்கு அல்ல.
தன்னை விட அடுத்தவர் சுகமாக வாழ்கிறார் என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
எல்லா சூழலிலும் அமைதியாக இருக்கும் அளவிற்கு உங்கள் மனதைப் பழக்கப் படுத்துங்கள்.
உங்களது வாழ்க்கை உங்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு வெறும் வேடிக்கை தான்.
உங்கள் வாழ்க்கையில் மெய்யான அக்கறை கொண்டோர் கண்டிக்கும் போது கோபம் கொள்ளாதீர்கள்.
நீங்கள் பேசும் போது மனதில் பட்டதை அக்கறையோடு பேசுங்கள். அடுத்தவர் பேசும் போது கவனமாக காது கொடுத்துக் கேளுங்கள்.
பேசுபவர்களிடம் சந்தோஷமாகப் பேசிப் பழகுங்கள். அதுவே தேவை இல்லாத மன அழுத்தங்களைக் குறைக்கும்.
எங்கு உங்கள் கவனம் செல்கின்றதோ,
அங்கு சக்தி பாய்கின்றது. உங்கள் கவனத்தை கவனத்தோடு செலுத்துங்கள்.
குறைகளும் நிறைகளும் கலந்ததே மனித வாழ்வு. நீங்கள் நிறைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள், எல்லாமே வெற்றியில் முடியும்.
நடக்கும் முன்னே நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நடந்த பின்னே, நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கைப் பயணம் தடையின்றிப் போகும்.

No comments:

Post a Comment