Monday 19 September 2022

மோடி எனும் எஃகுச்சிந்தனை

 மோடி எனும் எஃகுச்சிந்தனை

பதிவை படிக்கறதுக்கு முன்னாடி படங்களை ஒருவாட்டி பார்த்துடுங்க.
ஆங்கிலத்திலே இருப்பது என்னெவென்றால்
இந்த அகில உலக இடதுசாரி மீடியாக்கள் வேறு வழியில்லாமல் பாரதம் வளர்கிறது என ஒப்புக்கொண்ட செய்திகள்.
இன்றைக்கு உலகத்தின் பெரும் சக்திவாய்ந்த பணக்கார நாடுகள் எல்லாம் பணவீக்கத்தாலும் கடும் விலையுர்வாலும் பொருளாதார வளர்ச்சியின்மையாலும் பாதிக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவின் பொருளாதாரம் ஆறு மாதமாக சுருங்கி வருகிறது.
சீனாவின் பொருளாதர வளர்ச்சி கிட்டத்தட்ட நின்றுவிட்டது.
இங்கிலாந்திலே அதாங்க நம்மை 200 வருடம் கொள்ளையடித்த கொடுங்கோல நாட்டிலே மின்சார கட்டணம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது.
ஐரோப்பாவிலே சமையல் எரிவாயு, மின்சாரம் எல்லாம் ரேஷனிலே கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு இவ்வளவு தான் என.
குளிரூட்டும் எந்திரங்களை இவ்வளவு குளிரிலே தான் வைக்கவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள்.
ஐரோப்பாவின் ஏன் உலகத்தின் பொறியியல் அறிவு கொண்ட நாடு என சொல்லப்படும் ஜெர்மனியிலே மக்களுக்கு நேரடி உதவித்தொகை வழங்க முடியாமல் தவிக்கிறது. கணக்கு எடுக்கவே இன்னும் நாலு வருசம் ஆகும் என சொல்கீறார்கள்.
பெரிய பணக்கார நாடுகளே இப்படி என்றால் மற்ற நாடுகளை பற்றி கேட்கவே வேண்டாம்.
பணவீக்கமும் விலைவாசி உயர்வும் தலைவிரித்து ஆடுகிறது.
திவால் ஆக பல நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன.
இப்படி உலகம் முழுவதும் பிரச்சினை தலைவிர்த்து ஆடும் போது
பாரதம் நல்ல நிலையிலே இருக்கிறது,
நல்ல வளர்ச்சிப்பாதையிலே செல்கிறது.
பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.
எப்படி என உலகத்திலே இருக்கும் பொருளாதார நிபுணர்கள் எல்லாம் புகழ்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்கள்.
இந்த இடத்திலே இரண்டு முன்பு மட்டுமல்ல மோடி பதவி ஏற்றதிலே இருந்தே என்ன நடந்தது என பார்க்கவேண்டும் ஆனால் இரண்டுவருடமாக அதாவது கொரோனா பாதிப்பின் போது
இந்த நாடுகள் என்ன செய்தன
இந்த பொருளாதார மேதைகள் என்ன அறிவுரை சொன்னார்கள்
இங்கே இருக்கும் எதிர்கட்சிக்கள் என்ன சொன்னார்கள் என பார்க்கவேண்டும்.
அத்தோடும் மோடி என்ன செய்தார்? என்ன செய்யமாட்டேன் எனவும் சொன்னார் எனவும் பார்க்கவேண்டும்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் என்ன செய்தன?
பணம் அச்சடித்து எல்லோரும் இலவசமாக அள்ளி அள்ளி கொடுத்தன.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பெரிய பெரிய சிந்தனையாளர்கள் பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் இங்கே பாரதத்திலும் அதே போல எல்லோருக்கும் பணம் கொடுக்கவேண்டும் என கூவினது ஞாபகம் இருக்கிறதா?
இங்கே கேரள கம்மினிஸ்ட் நிதியமைச்சர் அதான் மோடியிடம் பணம் அச்சடிக்கும் எந்திரம் இருக்கே அதை வைத்து எல்லோருக்கும் பணம் கொடுக்கவேண்டியது தானே என சொன்னார் என்பது ஞாபகம் இருக்கிறதா?
பலமுறை நிதியமைச்சராக இருந்த பசிதம்பரம் என்ன சொன்னார் என ஞாபகம் இருக்கிறதா?
ஆளுக்கு 10,000 கொடுத்தால் என்ன? அரசுக்கு என்ன நட்டம் வந்துவிட போகிறது?
இருக்கறத எல்லாம் எடுத்துவிட்டால் என்ன?
பணம் செலவழிக்க தயங்க கூடாது என அறிவுரைகளை அள்ளித்தெளித்தது ஞாபகம் இருக்கிறதா?
இப்போது நாலு நாள் அதுவும் ஷூ போட்டுக்கொண்டு தினமும் 500 மீட்டர் நடந்ததற்கே காலிலே கொப்பளம் என ஓய்வு எடுக்கும் ராஜ குடும்பத்து எளவரசர்
எப்படி எப்படியெல்லாம் டீவிட் போட்டும் அறிக்கைவிட்டும் பொங்கி எழுந்தார் என ஞாபகம் இருக்கிறதா?
மம்தாவிலே இருந்து கேஆர்எஸ், இங்கெ திராவிட கட்சிகள் என எல்லோரும் இலவசம் கொடு, பணம் கொடு என குதித்தது ஞாபகம் இருக்கீறதா?
இத்தோடு நின்றார்களா?
கோவிட் தடுப்பூசிக்கு என்ன எல்லாம் பேசினார்கள்?
மோடியே நேரடியாக தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பேசி உற்பத்தியை முடுக்கிவிட்டபோது இங்கிருந்த பெரும் சிந்தனையாளர்கள் என்ன சொன்னார்கள்?
தடுப்பூசி போட ஆரம்பித்தவுடனே
25 வருடம் ஆகும், 50 வருடம் ஆகும் என்றெல்லாம் எள்ளி நகையாடினார்களே ஞாபகம் இருக்கீறதா?
அதிலேயும் அமெரிக்க கம்பெனிகளிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்க தடுப்பூசிகளை கொள்ளை விலைக்கு நமது நாடு வாங்கவேண்டும் என வளைத்து வளைத்து எழுதினார்களே ஞாபகம் இருக்கீறதா?
சீன அடிவருடிகள் இங்கே இருந்துகொண்டு சீனாவிடம் தடுப்பூசி வாங்கவேண்டும், வெக்கத்தை விட்டு கேட்டு வாங்கி போடவேண்டும் ஏனென்றால் இங்கே அவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்கமுடியாது என சொன்னது ஞாபகம் இருக்கிறதா?
இதற்கு நடுவே விவசாயிகள் போராட்டம் என தூண்டி விட்டது, கலவரம் ஏற்படுத்த முயற்சி செஞ்சது எல்லாம் தனி.
இவ்வளவு தூரம் தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்ந்த போதும் மோடி தன்னுடைய முடிவுகளிலே சிந்தனைகளிலே உறுதியாக இருந்தார்.
இலவசம் தரப்படும் ஆனால் எல்லோருக்கும் அல்ல.
பொருட்கள் தரப்படும் ஆனால் எல்லோருக்கும் அல்ல.
பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆனால் இந்த அறிவுகெட்ட ஆட்கள் சொல்வது போல் அல்ல.
எனும் முடிவிலே இருந்தார்.
உணவுப்பொருட்கள் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் பசித்தோருக்கு விநியோகம் செய்யப்பட்டது.
ஒரு வருடத்திற்கு மேலாக பசித்தோருக்கு தேவையான அளவுக்கு தானியங்கள் மட்டுமல்லாது எண்ணெய் உட்பட பொருட்களும் தரப்பட்டன.
சரிங்க அதுக்கு பதிலா பணமே கொடுத்திருக்கலாமே மக்களே வாங்கியிருந்திருப்பாங்க இல்லையா என கேட்டால்
அப்படி செய்திருந்தால் அந்த பொருட்களை எடுத்துவருவது யார்? எங்கே இருந்து எந்த வியாபாரிகள் வாங்குவது என்பதிலே எல்லாம் பிரச்சினைகள் வந்திருக்கும்.
அரசே கையிருப்பிலே இருக்கும் தானியங்களுடன் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து கொடுத்ததால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டன.
சரி இது உணவுக்கு ஆனால் பொருளாதாரம் என கேட்டால்
அதற்கு விளைவுகளை நோக்கிய ஊக்குவிப்பு முயற்சிகள் செய்யப்பட்டன.
தொழில்களுக்கு நேரடியான கடன் தரப்பட்டது.
தொழில் செய்யும் தொழில்முனைவோர் வைத்திருந்த வங்கிக்கணக்கை பொறுத்து கடன் தரப்பட்டது.
முன்பே வாங்கியிருந்த கடன் தொகையிலேயும் மேலும் கடன் தரப்பட்டது.
சிறுகுறு வியாபாரிகளுக்கு தனியே கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பல சலுகைகள் தரப்பட்டது. குறிப்பிட்ட தொழில்களுக்கு எனவும் தனியே திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இதையெல்லாம் விட தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்துகொண்டே இருப்பதிலே இருந்து தொய்வில்லாமல் இருந்தோம்.
அது உள்கட்டமைப்பு விஷயங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது.
சாலைவசதிகள்
ரயில்பாதை அமைத்தல்
புதிய நீர்கால்வாய்கள், அணைக்கட்டுகள், திட்டங்கள்
ரயில்வே நிலையங்களை புதுப்பித்தல், இருக்கும் பராமரிப்பு பணிகளை செய்தல்
மின்கட்டுமான திட்டங்களை வடிவமைத்து செய்தல்
என தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதை உறுதிசெய்தார் நமது பிரதமர் மோடி.
இதனால் பொருளாதாரம் தானாகவே வளர்கிறது என்பதை இப்போது வேறு வழியின்றி ஒத்துக்கொள்கிறார்கள் உலக பத்திரிகைகளே.
அந்த கார்டியன் பத்திரிக்கை சொல்கீறதே இந்தியா இன்னும் 30 வருடங்களுக்கான பொருளாதார வளர்ச்சிப்பாதையை அமைத்துவிட்டது என்பது அது இது தான்.
இதே தான் கொரோனா தடுப்பூசி விஷயத்திலேயும்.
சீனாவிலே சீனாக்காரர்கள் தயாரித்த சைனோவேக் எனும் மருந்து சரியாக வேலைசெய்யவில்லை என்பதை அமெரிக்க ஐரோப்பிய ஆட்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஏன்னா சீனாவுக்கு போகவேண்டும் என்றால்
7 பிசிஆர் டெஸ்டுகள், அங்கே போய் 7 நாள் தனிமை, பின்பு ஒரு 7 பிசிஆர் டெஸ்டுகள், பின்பும் ஒரு 7 நாள் தனிமை
இதெல்லாம் என்ன என கேட்கிறார்கள்.
ஜெர்மனி செய்த தடுப்பூசியும் வேலை செய்யவில்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை தாண்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை வைத்திருக்கும் ஒரே நாடு நாம் தான்.
இதிலேயும் மோடி உறுதியாக இருந்தார்.
கோவேக்சின் தயாரித்த நிறுவனமான பாரத் பயோடெக் நிறுனத்தின் மீது போலியான பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியபோதும் அரசின் ஆதரவு என்பது மாறவில்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே நேரடியாக கண்காணித்து வந்தார். மத்திய அரசு கிட்டத்தட்ட 4000 கோடிகள் கடனாக கொடுத்து ஊக்குவித்தது.
பாரத் பயோடெக் நிறுவனர்கள் இருவருக்கும் பத்மபூஷண் விருது வழங்கியும் கெளரவித்தார்.
இன்றைக்கு நாம் கோவிட் என்றால் அது எங்கோ ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலே இருக்கிறது என்கிறோம்.
சீனா இன்னமும் முழு லாக்டவுனிலே இருக்கிறது. அமெரிக்காவிலே இன்னமும் தொற்று தீரவில்லை.
ஐரோப்பாவும் அப்படியே.
இதுவே நாம் இங்கே தடுப்பூசி தயாரிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு லட்சம் கோடிகளை செலவழிக்கவேண்டியிருந்திருக்கும்?
இப்படி தொடர்ந்து தாக்குதல்கள், வெளிநாட்டு ஊடகங்களிலே தொடர்ந்து இழித்தும் பழித்தும் எழுதப்படும் கட்டுரைகள் எல்லாம் வந்தபின்பும்
எதிரிகட்சிகளின் தொடர்தாக்குதலுக்கு ஆடாமல் அசராமல் இருந்து நிலையாக நின்று செய்ததை முடிக்க எவ்வளவு மன உறுதி தேவைப்படும்.
சொந்த பிரச்சினைகள் வரும்போது நினைத்துக்கொள்வேன்
மோடி சந்திக்காத பிரச்சினையா? அதெல்லாம் இதன் முன்பு என்ன என?
சரி இத்தோடு முடிந்தது என மோடி ஒன்றும் ஓய்வு எடுக்கவில்லை.
உக்ரைன் பிரச்சினை வந்தவுடனே அதை கையாண்டது பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சீனா கம்மினிஸ்டு கட்சி நமது பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் உள்நாட்டிலே பரப்புரை செய்துகொண்டிருக்கிறது.
இருந்தாலும் உக்ரைன் பிரச்சினையிலே மேற்கத்திய நாடுகளுக்கு மோடி போல் பதில் சொன்னது யாரும் கிடையாது என சீன மக்களே இன்று மோடியை பாராட்டுகின்றனர்.
அதே நேரத்திலே சீனாவுடனான மோதலிலேயும் பின்வாங்கவில்லை.
நமது ராணுவம் உறுதியாக வீராவேசமாக நின்றது.
சீன ராணுவ படைகள் இந்தப்பக்கம் போய் இந்திய படைகளிடம் சரணடைந்துவிடும் என சீன படைவீரர்களின் கையிலே சிறு வெடிகுண்டு கட்டிவிடுகிறது சீன ராணுவம். ஜிபிஎஸ் மூலம் அது வெடித்துவிடும் என சொல்கிறார்கள்.
அதாவது எல்லையை தாண்டி சீன ராணுவவீரர் வந்தாலே தானாகவே வெடிக்கும்படி. சீன ராணுவ வீரர்கள் மீது அந்த நாட்டிற்கு அவ்வளவு நம்பிக்கை.
நமது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கனரக வாகனங்கள், பீரங்கிகள், பல்முனை ஏவுகணைகள் என பலவற்றை கொண்டு போய் நிறுத்தியிருக்கிறோம்.
விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக விலகி போய்க்கொள்கிறோம் என சொல்லுமளவுக்கு சீன ராணுவம் வந்து நிற்கிறது.
உடனே அந்த அந்நியசெலவாணி கையிருப்பு என்ன ஆனது என்றால்
இப்பவும் நாம் 550 பில்லியன் டாலர் கையிருப்பு வைத்திருக்கிறோம்.
இது இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்த நிலை.
கவனிங்க கொரோனா காலகட்டத்திலேயும் நாம் 50 பில்லியன் டாலர் கையிருப்பை உயர்த்தினோம். அது இந்த உக்ரைன் பிரச்சினையால் கொஞ்சம் செலவாகிவிட்டது அவ்வளவு தான்.
அதாவது 2020 இருந்த பணக்கையிருப்பு அப்படியே இருக்கிறது.
ஒரு சாதாரண தலைவர், அரசியல்வாதி என்றால் இத்தோடே நின்று கொண்டு கொஞ்சமேனும் ஓய்வு எடுத்திருப்பார்கள்.
எஃகுச்சிந்தனை கொண்ட மோடியே அப்படி ஏதும் தேங்கிவிடவில்லை.
நம்நாட்டிலேயே கணினி சிப்கள் தயாரிப்பதையும் முன்னெடுக்கிறார்.
இங்கேயே மின்னணு பொருட்கள் தயாரிக்க கடனுதவி, பண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொண்டு முன்வந்துள்ளன.
இதன் விளைவு
இன்றைக்கு ஒட்டுமொத்த உலகநாடுகளும் வளர்ச்சி இல்லை என இருக்கும்போது
நாம் 14 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறோம்.
சுற்றியிருக்கும் நாடுகளிலே உணவுக்கும் எரிபொருளுக்கும் அடித்துக்கொள்ளும்போது
நாம் இங்கே அடுத்து என்ன சினிமா வருகிறது என ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறோம்.
உலக நாடுகளிலே பணவீக்கம், பொருள் விலைஏற்றம் தலைவிரித்து ஆடும்போது
அடுத்து தேர்தல் எப்போது யார் வெல்வார்கள் என விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.
மோடியின் எஃகுச்சிந்தனை இன்றி இது சாத்தியமா?
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
பாரதத்தின் ஒப்பற்ற தலைவரே.
இது போல் இன்னமும் பல ni நூறாண்டு வாழ்க. வாழ்க.

No comments:

Post a Comment