Wednesday 7 September 2022

பட்டமங்கலம் நாடு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு மனிதத்தேனீ சிறப்புச் சொற்பொழிவு.

 பட்டமங்கலம் நாடு

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு மனிதத்தேனீ சிறப்புச் சொற்பொழிவு.
நேற்று இரவு பட்டமங்கலம் நாடு
அருள்மிகு மதியாத கண்ட விநாயகர், அருள்மிகு அழகு செளந்தரி அம்பாள், அருள்மிகு நவமர காளி அம்பாள் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முதல் இலக்கிய நிகழ்ச்சி.
மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
அறம் காத்திடும் ஆன்மீகம்
என்ற தலைப்பில்
பேசுகையில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழி மூச்சுக் காற்று உள்ள போதே அறம் சார்ந்த பணிகளைச் செய்து விட வேண்டும் என்பதாகும்.
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல
என்று வள்ளுவப் பெருந்தகை நமக்கு வழிகாட்டுகிறார்.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி என்கிறார் ஒளவையார்.
இது போன்ற சிறிய ஊர்களில் உள்ள கோவில்கள் தொன்மையான வரலாற்று சிறப்புமிக்கவை,
இதன் அறப்பணிகள் அவசியமான ஒன்று.
சிறு கோவில், சிறு தெய்வ வழிபாடு சிறந்தது. பெரிய கோவிலில் பல மணி நேரங்கள் காத்திருந்து வழிபடுவதை விட இதற்கான பலனும் அதிகம் என்றார்.
அறம் காத்திடும் ஆன்மீகம் மேன்மை பெற வளர்ந்த தலைமுறையும் வளரும் தலைமுறையும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நாட்டார் நகரத்தார் இணைந்து திருப்பணி செய்துள்ளனர். இது நமது வளர்ச்சிக்கும் தேசத்தின் மேன்மைக்கும் சிறந்த நிலை என்றார்.
ஐம்பது நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார்.
நாட்டார் நகரத்தார் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நெறியாளர் மதிக்குமார் தாயுமானவன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியை மதுரை அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன் வழங்கினார்.
நாகம்மை பில்டர்ஸ் அழ. பெரியகருப்பன் செட்டியார், மா. அழகுசுந்தரம் செட்டியார், மா. அடைக்கலவன் மற்றும் நகரத்தார் முன்னோடிகள், நாட்டார் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் தொடங்கியது.
பொது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழிய பட்டமங்கலம் நாடு ஒற்றுமை.












No comments:

Post a Comment