Saturday 10 September 2022

அறிவுரை எனும் வழிகாட்டி.

 அறிவுரை எனும் வழிகாட்டி.

ஏதேனும் குறை இருப்பதாக யாராவது சுட்டிக் காட்டினால் அதைக் காது குடுத்துக் கேட்கணும் .
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 34,000 ரன்களைக் குவித்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு குறை இருந்தது .
அதை ஓர் ஹோட்டல் ஊழியர் சுட்டிக் காட்டிய பின்னாலதான், சச்சின் அதைச் சரி செய்தார் . என்ன குறை அது.
மும்பையில் சச்சின் பை ஸ்பார்டான் (Sachin By Spartan ) என்ற நிகழ்ச்சி நடந்தது .
அதில் சச்சின் பேசியது :
யாரிடம் இருந்தும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால், பல விஷயங்களில் நாம் மேம்படலாம் . சென்னையில் ஓர் ஹோட்டலில் தங்கியிருந்தேன் . அப்போது ஒரு ஊழியர் (waiter ) என்னிடம் வந்தார் . தயங்கியபடியே, நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால், அவமதிப்பாக நினைக்க மாட்டீர்கள் என்றால் நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றார் .
சொல்லுங்கள் என்றேன் .
உங்கள் பேட் ஸ்விங் செய்வதற்கு elbow guard தடையாக இருக்கிறது போல தெரிகிறது என்றார் .
அவர் சொன்னது 100 சதவீதம் உண்மை . ஏதோ ஒரு விஷயம் அசௌகர்யமாக இருப்பது தெரிந்தது . ஆனால் , அது என்னவென்று எனக்கு பிடிபடாமல் இருந்தது .
இந்த எல்போ கார்டு உறுத்தலாக இருப்பது எனக்கு தோன்றவே இல்லை .
இரண்டு முறை பந்து எல்போ கார்டில் தாக்கியிருக்கிறது . அவர் சொன்ன பிறகுதான் , எல்போ கார்டு தரமின்றி இருப்பதை உணர்ந்தேன் .
உடனடியாக அதை ரீடிசைன் செய்தேன் . அதன் பிறகு பேட் ஸ்விங் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை .
நம் நாட்டில் அடகுக்கடைக்காரர் முதல் ஒரு கம்பெனியின் சி.இ.ஓ வரை யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அறிவுரை சொல்லலாம் .
நல்ல அறிவுரை யாரிடம் இருந்து வந்தாலும் , அதை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment