Friday 9 September 2022

ஏளனம் எதிர்ப்பு ஏற்றுக்கொள்தல் என மூன்று நிலைகள்.

 ஏளனம் எதிர்ப்பு ஏற்றுக்கொள்தல்

என மூன்று நிலைகள்.
அடுத்தவர்களின் முயற்சியை சுற்றியிருப்பவர்கள் அவ்வளவு எளிதில் அங்கீகரித்து விடமாட்டார்கள். உனக்கேன் அந்த ஆசை! அவ்வளவு உயரத்தை நீ எப்படி அடைவாய்? என்று முதலில் ஏளனம் செய்வார்கள். பிறகு, சிலர் எதிர்ப்பைக் காட்டுவார்கள்.
இறுதியில்தான் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சுவாமி விவேகானந்தர் தான் இந்த படிநிலைகளைக் காட்டுகிறார். எச்செயலுக்கும் ஏளனம். எதிர்ப்பு. ஏற்றுக் கொள்ளப்படுதல் என மூன்று நிலைகள் இருக்கும் என்கிறார்.
இளமைப் பொழுதில் அனைவர் மனமும் ‘அதை அடைய வேண்டும்! இதைப் பெற வேண்டும்' என வெவ்வேறு ஆசைகளில் வித்தியாசமான கனவுகளில் லயிக்கும்!
நாம்தான் மனக்குதிரைக்கு லகான் போட்டு லட்சியப் பாதையில் நாளும் அதைச் செலுத்த வேண்டும்.
பேரறிஞர் ஒருவர் கூறுகிறார்;
பத்து முயற்சிகளில் ஒன்றுதான் பலிக்கிறது. ஆனால், பத்துக் காரியங்களிலும் வெற்றியைப் பெற வேண்டும் என எண்ணினேன். அதற்கான வழியையும் தெரிந்து கொண்டேன்.
முயற்சிகளை அதிகப்படுத்தினேன்.நூறு முறை முயன்றேன். நினைத்தபடி பத்து செயல்களில் வெற்றி பெற்றேன் என்கிறார்.

No comments:

Post a Comment