Friday 16 September 2022

ஓலம் சூழ்ச்சி வீழ்ச்சி எழுச்சி காணொளி மதிப்பீட்டு விழா. 15.09.2022 இரவு மதுரை ஹோட்டல் ராஜதானி அரங்கில் தென் இந்திய ஆய்வு மையம் நடத்திய ஓலம் ( சூழ்ச்சி வீழ்ச்சி எழுச்சி) காணொளி மதிப்பீட்டு விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் எம். குமரேசன் விளக்கவுரை ஆற்றிட சமூக ஆர்வலர் பாலாஜி வரவேற்புரை நிகழ்த்தினார். 11 பாகம் உள்ள இதில் முதல் நான்கினை பேராசிரியர் ம. எழில் பரமகுரு 5 முதல் 8 பாகம் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் 9 முதல் 11 பாகம் முனைவ‌ர் எஸ். தீனதயாளன் விமர்சன உரை ஆற்றினார்கள். இந்திய சுதந்திர வரலாறு மற்றும் தமிழகத்தின் பங்களிப்பு என நமது தியாகச் செம்மல்களை நினைவு கூர்ந்து நடைபெற்ற, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த முயற்சியாக அமைந்தது. நிகழ்ச்சியை திருமதி துர்கா தேவி தொகுத்து வழங்கினார். வாழிய தேச பக்தி.

 







No comments:

Post a Comment