Tuesday 6 September 2022

மறு + உந்து

 *மறு + உந்து*

=
*'மருந்து"*
உடல் இயங்குவதற்கு தேவையான 'உந்து' சக்தி தான்...
*உணவு*
தவறான உணவுகள்,
தவறான பழக்க வழக்கங்கள்,
மற்றும்
விபத்துகளால்...
உடலில் ஏற்படும் கோளாறுகளால்...
உடல் இயங்க தடுமாறும் போது...
மாற்று அதாவது 'மறு...'
உந்து சக்தி தேவைப்படுகிறது.
அதாவது உணவுக்கு மாற்றாக *வீரியமிக்க உணவு...*
மறு உணவு தான்...
மறு உந்து.
*'மருந்து'*
ஆக,
*உணவே மருந்து*
வீரியம் மிக்க உந்து சக்திகள் தான்...
உண்மையான மருந்து.
*பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் தான்...* உணவே மருந்து.
உடலின்
*கழிவுகளை நீக்கம் செய்வது* பெரும் மருந்து.
*உடற்பயிற்சி செய்வது* தின மருந்து.
*விரதம் இருப்பது* குண மருந்து.
*சிரித்து மகிழ்வது* உற்சாக மருந்து
*தூக்கம்...* ஆக்க மருந்து.
*சூரியஒளி* சிறந்த மருந்து.
*நன்றியுடன், அன்புடன் வாழ்வது* அருமருந்து.
*நல்ல நண்பர்கள்* நல்மருந்து.
*மன சுத்தத்தினால் ஏற்படும் 'மன அமைதி'* அகமருந்து.
*தன்நம்பிக்கை* ஒரு நித்ய மருந்து.
*அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது* 'கருணை' எனும் உயரிய மருந்து.
"எண்ணம் போல் வாழ்வு" என்ற இயற்கையின் நியதி படி
*நல்ல எண்ணங்கள்* தான் நல்ல மருந்து.
மொத்ததில்
*இயற்கையுடன் இணைந்து...*
*இயல்பாய் வாழ்வதே* நிறை மருந்து.
*இதை ஏற்றுகொண்டு வாழ்பவர்களுக்கு...*
*தேவையில்லை ரசாயன (நச்சு) மருந்து*
ஆகவே,
*இயற்கையோடு இணைவோம்🙏*
*இனிய வாழ்வு பெறுவோம்*🙏
*நன்றி

No comments:

Post a Comment