Tuesday 30 August 2022

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன். கோயம்புத்தூரின் கணபதி R.கிருஷ்ணசாமி கவுண்டர்(RK) வெள்ளோடு சாத்தந்தை கூட்டம்.படிப்பால் தமிழ் பண்டிதர்.ஜிடி நாயுடுவுக்கு இணையாக பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.அந்தக்காலத்தில் இருந்து இயற்கை விவசாயி இவரது விவசாய பண்ணை இயற்கை விவசாய ஆராய்ச்சி கூடம் போல இருக்கும்.அந்தக்காலத்திலேயே மரவள்ளி கிழங்கு சேலம் வியாபாரிகளிடமிருந்து நல்ல விலை கிடைக்க கோவையிலேயே சேகோ பேக்டரி அமைத்தவர்.மாட்டு வண்டியில் நடமாடும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தியவர்.இன்று ஏராளமான கிராமங்களில் பயன்படுத்தப்படும் கோபர் கேஸ் சாண எரிவாயுகலனை கண்டுபிடித்தவர் 50 ஆண்டுகளாக அதையே பயன்படுத்தியவர்.நிலக்கரி என்ஜினை கொண்டு லாரி பஸ்கள் இயக்கும் படி வடிவமைத்தவர்.நாம் தற்போது பயன்படுத்தும் மோரிஸ் வாழைப்பழங்களை அறிமுகப்படுத்தியவர்.ஜிடி நாயுடுவாலேயே சமாளிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் பஸ் போக்குவரத்து தொழிலை கோவையில் நடத்திக்காட்டியவர்.விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்தவர்,நடத்தியவர் விவசாயிகளுக்காகவும் கொங்கு வேளாளர்களுக்காகவும்,வேளாள வாலிபன்,ஏர் உழவன் போன்ற 4 இதழ்கள் நடத்திய பத்திரிக்கையாளர்.கோவை கணபதி யூனியன் சேர்மேனாக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.C.ராஜாஜியின் சுதந்திர கட்சியின் செயலாளர் அவிநாசி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், பின்னாளில் பிஜேபி மாநில விவசாய அணி தலைவர்,மாநிலத்துணைத் தலைவர்(1992-96)என்று பல்வேறு அரசியல் பொறுப்புகளையும் அலங்கரித்தவர்.C.ராஜாஜி,திரு.மோகன்தாஸ் கரம் காந்தி காலம் தொட்டு Dr.முரளி மனோகர் ஜோஷி,திரு.L.K.அத்வானி, இன்றைய பிரதமர் திரு.நரேந்திர மோடி வரை இவரது இல்லத்துக்கு வராத முதல்வர்கள் அரசியல்வாதிகள் இல்லை என்று சொல்லலாம். சிறந்த ஆன்மீகவாதி,சைவ உணவு பழக்கம் உடையவர்,எளிமை பணிவு நிறைந்தவர்.திருக்குறளை அனுதினமும் படிப்பவர்,வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுபவர்.எதிரிகளையும் நண்பர்களாக மாற்ற தெரிந்தவர்.இன்று இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் ரூட்ஸ் நிறுவன தலைவர் திரு.K.K.ராமசாமி,போட்டோ சென்டர் உரிமையாளர் K.மருதாச்சலம் இருவரும் கணபதி R.கிருஷ்ணசாமி கவுண்டரின் மகன்கள்!!! நன்றி எஸ் வி பழனிச்சாமி


 

No comments:

Post a Comment