Friday 26 August 2022

கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

 கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

எத்தனை " தேன்" ஐயா. நாம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பாடல். " பார்த்தேன் சிரித்தேன்"-- வீர அபிமன்யு🙏
எந்நேரமும்..எல்லாமும் அவளே தான்.."காலையும் நீயே மாலையும் நீயே"... என்ன இனிமையான பாடல்.. மீண்டும் மீண்டும் நாம் பாடலாம்... தேன் நிலவு🙏
மிகவும் ஜாலியாக இருக்கும் போது கவிஞர் எழுதினாரோ"" ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்""-- நிச்சயதாம்புலம்🙏
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா.....காதலர்களின் ஆசைக்கு எல்லை உண்டோ--"" ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல்""- பொன்னூஞ்சல்🙏
பொன்னையும் பொருளையும் விரும்பும் உலகில் அவள் அவனை மட்டுமே விரும்புகிறாள் . வரிகள் அத்தனையும் கற்பனையின் உச்சம். "" பொன்னை விரும்பும் பூமியிலே""-- ஆலயமணி
""ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு""..மேடைகளில் கவிஞரை பாடச் சொல்வார்களாம். அது TMS பாடியது என்று கவிஞர் கூறினாலும் யாரும் ஏற்றுக் கொள்வது கிடையாதாம். எனவே கவிஞர் TMS யிடம் "என்னய்யா MGR SIVAJI JAISANKAR என்று எல்லோர் மாதிரியும் பாடி என் குரல் போலவே இந்தப் பாடலையும் பாடி இருக்கிறாயே"" என்று தட்டிக் கொடுத்து பாராட்டினாராம். என்ன பரந்த உள்ளம் கவிஞருக்கு🙏
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
பாசம் திரைப்படம்
கடலளவு கிடைத்தாலும் மயங்காத..அது கையளவே ஆனாலும் கலங்காதே உள்ளம் கவிஞருக்கு. "'ஆட்டுவித்தான்"". கண்ணனுடன் கலந்து பாட கண்ணன் தாசனுக்கு சொல்லவா வேண்டும். அவன் தான் மனிதன்🙏
"" மாற்றம் எனது மானிட தத்துவம். மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல""-கவிஞர்🙏
நன்றி சாந்தாராம் மும்பை

No comments:

Post a Comment