Thursday 18 August 2022

கவிஞர் வீட்டில் அசைவம் சமைத்தால் கர்மவீரர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்

 கவிஞர் வீட்டில் அசைவம் சமைத்தால் கர்மவீரர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்

🙏
இரவு நேரங்களில் இருவரும் சந்திக்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பார்களாம்🙏
கவிஞர் அன்பு நட்பு ரீதியாக 3 நடிகைகளை மட்டுமே அடிக்கடி குறிப்பிடுவாராம். TR ராஜகுமாரி..மனோரமா..தேவிகா🙏🙏
"கவிஞர் அண்ணா, அமெரிக்கா சென்று வருகிறேன் என்று என்னிடம் கூறிச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை என்று மிகமிக வருத்தப் பட்டாராம் தேவிகா"🙏
"சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி"" கர்ம வீரரைப் புகழ்ந்து எழுதியது... பட்டிக்காடா பட்டணமா🙏
"இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி... இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி""... எவ்வளவு ஆழமான காதல் பிரிவின் வேதனை வரிகளய்யா-- இதயக்கமலம்🙏
""எங்குமே என் பெயர் தான் தெரிகிறது. மக்களுக்கு போரடித்து விடாதா? ஆரோக்கியமான போட்டி இல்லையே. எனக்கே போரடித்து விட்டது"" என்று ஒரு காலக் கட்டத்தில் கவிஞரே கூறியதுண்டு
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த"" அருமை காதல் பாடல்-- ஆனந்த ஜோதி.. தேவிகா கவிஞரை சந்திக்கும் போதெல்லாம் பாடுவாராம்🙏
""அத்திக்காய் காய் காய் ஆலங்காய்"" எத்தனை காய் என்று எண்ணி சொல்லுங்களேன்...மேலும் இப்பாடலில் உள்ள இலைமறை காய் அர்த்தங்கள் இன்னும் புரியவில்லை🙏பலே பாண்டியா.
"சத்தியம் தோற்றதுண்டா உலகில் தர்மம் அழிந்ததுண்டா""...சிந்திக்க வைக்கும் வரிகள்... ஆனந்த ஜோதி🙏
நன்றி சாந்தாராம் மும்பை
கண்ணதாசன் தமிழ்ப் பேரவை வாட்சாப்

No comments:

Post a Comment