Tuesday 30 August 2022

கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

 கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

(வேட்டைக்காரன்-படம்
கண்ணதாசன்-வரிகள்)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா!?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா!?
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
(தன்நம்பிக்கை எண்ணத்தோடு) - வீரா
" ராஜா மிக யோகசாலி. இதுதான் நான் எழுதும் கடைசி பாடல்" என்று உதவியாளர் கண்ணப்பனிடம் சொல்லி விட்டு வந்தாராம் கவிஞர். "" கண்ணே கலைமானே"" பாடல்🙏
சினிமாவிற்காக இந்த பாடல் எழுதினாலும் அவரது குழந்தைக்காக எழுதப்பட்டதாம்🙂
வாய் பேச முடியாத அக்காவின் மன ஆறுதலுக்காக தங்கை பாடுவதாக எழுதியிருந்த பாடலைத்தான் பின் நாளில் மாற்றி எழுதியிருந்தார் கவிஞர் --" மலர்ந்தும் மலராத"" பாடல் தான் அது🙏
அன்பு அண்ணன் தங்கைக்காக பாடுவது... "மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை"" வரிக்கு வரி இலக்கியச் சுவை.... அண்ணன் ஒரு கோவில் படம்🙏
அன்பு கணவனுக்காக பாடுவது.. " மல்லிகை என் மன்னன் மயங்கும்""-- தீர்க்க சுமங்கலி படம்🙏
அன்பு அண்ணனுக்காக தங்கை பாடுவது.."" அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ"..அத்தனையும் பாசமுள்ள வரிகள""🙏
அன்பு தம்பியை வளர்த்ததை நினைத்து அண்ணன் பாடுவது. "" அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்""-- ரா ர...படம்🙏
இளமை சுகமும் இனிமை கனவும் இருவர் நிலையும் ஒன்றே.
அருமையான
காதல் வரிகள். "" சிரித்து சிரித்து என்னை""--தாய் சொல்லைத் தட்டாதே.🙏
மின்னல் பாதி தென்றல் பாதி அவளை ஈன்றதோ....."" சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே""-- எ.வந்தாள் படம்🙏
"சிரிப்பு வருது சிரிப்பு வருது""... மனிதர்களின் மனநிலையை சித்தரிக்கும் அற்புதமான பாடல்""-- ஆண்டவன் கட்டளை🙏
பெண்கள் நாகரிகம் பற்றிய எளிய வரிகளில் "" பொம்பளை சிரிச்சா போச்சி"""-- சங்கே முழங்கு🙏
அதே தொணியில் மற்றொரு பாடல் "" சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா""-- தனிப்பிறவி🙏
நன்றி சாந்தாராம் மும்பை

No comments:

Post a Comment