Friday 19 August 2022

வாழ்க்கையில் கஷ்டப்படாத மனிதர்கள் இன்னும் பிறக்கவே இல்லை.

 வாழ்க்கையில்

கஷ்டப்படாத
மனிதர்கள்
இன்னும் பிறக்கவே இல்லை.
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமான
போராட்டக் களத்தைச் சந்தித்தவர்களே.
தாங்க முடியாத
பெரும் பாரத்தைச் சுமந்தவர்கள்.
வாழ்க்கையில்
பார்த்து
தெரிந்துக்கொள்ள
வேண்டிய
விஷயங்கள்
பல இருந்தாலும்
படித்துதெ தெரிந்துக்கொள்ள
வேண்டிய விஷயங்கள்
சில இருந்தாலும்
பயணித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய
விஷயங்கள
நிறைய இருக்கின்றன.
பறக்கின்ற பறவைகள் எல்லாம்,
இருக்கின்ற கிளையைக் கூட நம்புவதில்லை.
நிலைக்கு ஏற்ப
உயர்ந்தும், தாழ்ந்தும் பறக்கிறது.
பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம் சாதனை செய்வதில்லை.
முயற்சிக்கின்ற
குழந்தை தான், உருள்கிறது தவழ்கிறது
நடக்கிறது.
முயற்சிகளை விதைத்தவுடன் வெற்றிகள் முளைப்பதில்லை.
முயற்சியில் பயணம் செய்து கொண்டிருந்தால் வெற்றிகள்
வெகுதூரம் இல்லை.
முயற்சித்துப் பார்
வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment