Monday 29 August 2022

அமைதி எனும் ரகசியம்.

 அமைதி எனும் ரகசியம்.

தன்னைத் தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவரையும் பொறுப்பதே தலையாய பண்பு என்கிறது, குறள்.
சுக்ரீவனின் நாட்டை அண்ணன் வாலி கவர்ந்து கொண்டமைக்காக, சுக்ரீவனும், வாலியும் சண்டையிடும்போது ராமன் அம்பினை செலுத்தி வாலியை கொல்லவில்லை. நீண்ட நேர சண்டைக்குப் பிறகும் வாலி மீது அம்பெய்யாதலால் பொறுமையிழந்த சுக்ரீவன் ராமனிடம், 'நீங்கள் என்னை ஏமாற்றிவீட்டீர்கள். சொல்லியபடி வாலியை நீங்கள் அம்பு எய்து கொல்லவில்லை' என்றான்.
நிதானமாகக் கேட்டுக்கொண்டு இருந்த ராமனிடமிருந்து இவ்வாறு பதில் வந்தது, 'நீங்கள் இருவரும் உடன் பிறந்தவராதலால் உடலும், முகமும் ஒன்றாகத் தெரிகிறது. எனவே என்னால் யார்? என்று தீர்மானித்து அம்பை குறி வைக்க இயலவில்லை. தவறாக உன் மீது அம்பு பாயக்கூடாது. எனவே இப்படிச் செய்யலாம்' என்ற ராமன்.
இருவரையும் வேறுபடுத்திக்காட்ட சுக்ரீவன் கழுத்தில் மாலையிட்டுக் கொண்டு வாலியுடன் சண்டையிட வேண்டும். மாலையில்லாதவன் வாலியாகி விடுவதால் என்னால் சரியாக அம்பை எய்து கொன்றுவிட முடியும் என்றதும், உண்மை நிலை அறிந்த சுக்ரீவன், ராமனின் கால்களில் விழுந்து வணங்கினான்.
*நம்முன் உள்ள பிரச்னைகள் பெரிதாகிவிடாமலிருக்க பேருதவி புரிவது நாம் காட்டும் பொறுமை தான்.*
ரயிலில் ஏறிய முன்பதிவு செய்திருந்த பயணி தன்னுடைய இடத்தின் எண்ணைச் சொல்லி ஏற்கனவே அதிலிருந்தவரை இறங்கச் சொல்லி விவாதம் செய்தார். அவரோ அமைதியாக இருந்து இது எனக்கு ஒதுக்கப்பட்டது என்றார். இவர் இந்த இடம் எனக்கு ஒதுக்கப்பட்டது என்று சண்டையிட்டதோடு தவறான வார்த்தைகளால் அவரைத் திட்டவும் செய்தார்.
இருவரது டிக்கட்டையும் வாங்கிப் பார்த்ததில் இரண்டிலும் ஒரே எண் இருந்தது.பின்னால் ரயிலில் ஏறியவர் செய்த தவறு இதுதான்.
அடுத்து வரவிருக்கின்ற ரயிலுக்குப் பதிலாக இந்த ரயிலில் ஏறியதோடு ஏற்கனவே உள்ளவரிடம் தேவையற்ற பிரச்னையும் செய்துவிட்டார்.
எனினும் முன்பிருந்தவர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
"பதற்றமான சூழல் பற்றிக்கொண்ட போதும் அமைதியைக் காண்கின்றவன் வாழ்வின் ரகசியம் அறிந்தவன்" என்கிறது கீதை

No comments:

Post a Comment