Saturday 20 August 2022

நினைப்பும் ஆசையும்.

 நினைப்பும் ஆசையும்.

ஆசைக்குத்தான் என்றும் அழிவேயில்லை. ஆசை ஓன்று நிறைவேறினால் மற்றொன்று என்று சங்கிலித் தொடராக வளர்ந்துகொண்டே தான்யிருக்கும், ஆசை என்றும் குறைவதில்லை. நிறைவேற நிறைவேற வளர்ந்துகொண்டே இருக்கும்.
*ஆசை தான் மனிதனின் வெற்றிக்கு திறவுகோல்* என்றாலும் அளவுக்கு அதிகமான ஆசையே அழிவுக்கும் காரணமாகமாகிவிடுகிறது.
ஒருவன் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
வழியில் வழிப்போக்கன் ஒருவன் கால்களில் காலணிகள் இன்றியும் வெய்யிலிற்கு குடையும் இன்றி சென்று கொண்டிருப்பதை பார்த்தான் ஒட்டகக்காரன்.
ஒட்டகத்தில் பயணிப்பவனைப் பார்த்தவுடன் வழிப்போக்கன்
ஐயா நீங்கள் தான் ஒட்டகத்தில் பயணம் செய்கிறீர்களே
உங்கள் காலணிகளை எனக்கு கொடுங்களேன் எனக்கு உதவியாய் இருக்கும் என்றான். உடனே ஒட்டகத்தில் பயணிப்பவனும் இரக்கப்பட்டு தனது காலணிகளை வழிபோக்கனிடம் தந்தான்.
சிறிது தூரம் சென்றவுடன் ஐயா நீங்கள் தான் வேகமாக ஒட்டகத்தில் செல்கிறீர்களே உங்கள் குடையும் எனக்கு கொடுத்து உதவுங்களேன் என்று கேட்டான் வழிப்போக்கன். உடன் ஒட்டகத்தில் சவாரி செய்பவனும் சரி என்று தனது குடையையும் கொடுத்தான்.
சிறிது தூரம் சென்றவுடன் வழிப்போக்கன் ஒட்டகத்தில் சவாரி செல்பவனைப் பார்த்து இவ்வளவு கொடுத்தீர்களே உங்கள் ஒட்டகத்தையும் கொடுங்களேன் என்றான்.
அதனைக்கேட்ட ஒட்டகத்தில் சவாரி செய்பவன் வழிபோக்கனைப் பார்த்து உனக்கு உதவ நினைத்ததே பாவம், முதலில் நான் உனக்கு கொடுத்த எனது செருப்புகள் மற்றும் குடையையைத் திருப்பிகொடு என்றான்.
உடனே வழிபோக்கனும் சிரித்துக்கொண்டே அவற்றை திருப்பிக் கொடுத்தான்.
ஒட்டகத்தில் சவாரி செய்பவன் வழிபோக்கனைப்பார்த்து சிரித்துக்கொண்டே திருப்பி கொடுக்கிறியே திருப்பிக் கொடுப்பதில் உனக்கு வருத்தம் இல்லையா என்று கேட்டான்.
நிச்சயமாக இல்லை என்றான் அந்த வழிப்போக்கன்.
ஏன் என்றான் ஓட்டககாரன்.
நான் உங்களிடம் ஒட்டகத்தை கேட்காமல் விட்டிருந்தால் ஐயோ இவ்வளவையும் கொடுத்த மகராஜன் ஒட்டகத்தையும் கொடுத்திருப்பாரோ என்று நினைத்து நான் பின்னால வருத்தப்படகூடாது அல்லவா அதனால் தான் கேட்டேன் என்றான் வழிப்போக்கன் மேலும் *ஆசைக்கும் எல்லை தேவை* என்ற தத்துவத்தையும் இன்று உங்கள் மூலமாக அறிந்துகொண்டேன் என்றான் வழிப்போக்கன்.
ஆசையே அழிவிற்கு காரணம்.

No comments:

Post a Comment