Thursday 25 August 2022

இலக்கை நோக்கித் தொடர் முயற்சி.

 இலக்கை நோக்கித் தொடர் முயற்சி.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்”
என்கிறார் வள்ளுவர்.
அதாவது இறைவனால் சாத்தியமில்லாத விசயமும் விடாமுயற்சி உடையவராக இருப்பின் சாத்தியம் எனக் குறிப்பிடுகிறார்.
உலகுக்கு மின்குமிழை தந்து ஒளியூட்டிய தாமஸ் ஆல்வா எடிசன் 999 தடவை தோல்விகளைச் சந்தித்து 1000வது தடவை தான் மின்குமிழை கண்டுபிடித்தார். இது அவரது விடாமுயற்சிக்கு பலருக்கும் எடுத்துகாட்டாகும்.
இந்தியாவின் இராமநாதபுரத்தில் வீடுகளுக்கு தினசரி பத்திரிகை போட்ட சிறுவன் பின்னாளில் இந்தியாவை விண்வெளியில் தலைநிமிர வைத்தவர், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் ஆக மாறினார். அவரது முயற்சியே ஆகும்.
போர்ச்சுகல்லில் ஒரு வேளை உணவுக்கே போராடும் குடும்பத்தில் பிறந்து இன்றைய கால்பந்து உலகில் சிறந்த வீரரான கிறிஸ்டியானோ றொனால்டோ பல பேருக்கு முன்னுதாரணமாக உள்ளார்.
முயற்சிகள் தவறலாம் ஆனால் நாம் முயற்சி செய்யத் தவறக்கூடாது. எனது முயற்சிகள் என்னை கைவிட்டதுண்டு ஆனால் நான் முயற்சியை ஒரு போதும் கை விட்டதில்லை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.
ஆகவே தான் மனதை கட்டுப்படுத்தி இலக்கை நோக்கி ஓடினால் நிச்சயம் ஓர் நாள் வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” முயலுங்கள் ஒரு நாள் வானம் வசப்படும்.

No comments:

Post a Comment