Saturday 27 August 2022

வாழ்வின் வசந்தம் நிலைத்திட.

 வாழ்வின் வசந்தம் நிலைத்திட.

நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு வாழ்க்கைக்குத் தேவையானது.
வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட பண்புகள் பற்றிய பதிவு.
இதனைப் படித்துப் பிடித்திருந்தால் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள் .
1. தினமும் காலையில் மலர்களைப் போல சிரித்த முகத்துடன் மலருங்கள் . பூத்துக் குலுங்கும் மலர்கள் இதழ்களை விரித்து புன்னகைப்பதைப் போல .
2. தெளிவான எண்ணங்களில் உயர்ந்த நோக்கத்தோடு சிந்தியுங்கள் . மலர்களின் வாசனையைப் போலவே எண்ணங்களில் வாசனையை உண்டாக்கி இந்த உலகில் மணக்கச் செய்யுங்கள் .
3. காலையில் பள்ளி அல்லது கல்லூரி அல்லது வேறு வேலைகளுக்குச் சென்றாலும் நேரத்திற்குப் புறப்பட்டு தயாராகுங்கள் .
4 .எல்லோரையும் நேசிப்பது சிரமம் . ஆனால் மலர்களிலே மல்லிகைக்கு தனி மணம் இருப்பதைப் போல தனித்துவமாய் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் .
5 . நல்லவர்களோடு நட்பாகப் பழகுங்கள் . பூவோடு சேர்ந்து நாறும் பயன்பெறும் அதுபோல நீங்களும் நல்லவர் ஆவீர்கள் .
6. காரணமே இல்லாமல் கோபப்படாதீர்கள் . மேகம் தோன்றாமல் பெய்வதில்லை . அதுபோல காரணம் எப்படிப்பட்டது என யோசித்து கோபம் கொள்ளுங்கள் .
7 . மற்றவர்கள் சொல்லும் கருத்துகள் சரியா ? எது சரி ? என்பதை ஆராய்ந்து முடிவெடுங்கள் .
8 . பலமுறை சிந்தித்து ஒருமுறை முடிவெடுங்கள் . ஒரு பூவிலே பல இதழ்கள் இருக்கும் மலரைப் போல பல வழிகளில் சிந்தியுங்கள் .
9 . பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது எனில் இருளை விரட்டும் நிலாவைப் போல பௌர்ணமியாய் ஒளிர்ந்து பயத்தை உதறி விடுங்கள் .
10 . நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் . நேராக வளரும் பாக்கு மரத்தைப் போன்ற உயர்ந்த நிலையை அடையுங்கள் .
11 . உண்மையையே எப்போதும் பேசுங்கள் . எங்கு சென்றாலும் பயமில்லை. பாலை நிலத்தில் வளரும் கள்ளிச் செடியைப் போல துணிந்து நில்லுங்கள் .
12 . மற்றவர்களின் கஷ்டத்தைப் பார்த்து புன்னகைக்காதீர்கள் . நமக்கு கஷ்டம் வந்தால் மட்டும் சிரிக்க வேண்டும் . சூரியன் வந்தால் மலரும் சூரிய காந்திப் பூவைப் போல ..
13 . எந்த செயலையும் நன்கு ஆலோசனை செய்த பிறகு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படுத்துங்கள் . காட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்தை போல .
14 .எந்த ஒரு செயலையும் வெற்றி அடையுமாறு செய்ய வேண்டும் . அதற்கு ஏற்ற காலம் , இடம் , தன் ஆற்றல் கூடும் வரை குளக்கரையில் மீனுக்காக கொக்கு காத்திருப்பதைப் போல ஏற்ற காலம் வரும் வரை காத்திருங்கள் .
15 . கிடைத்த உணவை உண்டு திருப்தி அடையுங்கள் . நன்றாக பசி இருந்தும் உணவு கிடைக்கும் வரை பொறுத்திருங்கள் . நன்றியுள்ள ஜீவன் போல..
16 . உங்களது வேலைகளை பொறுமையாக முடித்து விடுங்கள் . தூக்கணாங்குருவி சிறுகச் சிறுக கூடு கட்டுவதைப் போல ....
17 . உங்களைவிட வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுங்கள் . எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை ஏளனம் செய்யாதீர்கள் .
18 . தினமும் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் .
19 . இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் போதுமான நேரம் உறங்கி ஓய்வெடுங்கள் .உறங்கும் போது கவலைகளை மறந்து உறங்குங்கள் .
20 . உங்கள் உடலின் பாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . ஒவ்வொரு பாகங்களின் மீதும் அக்கறை காட்டுங்கள் .
21 . மற்றவர்களுக்கு உதவி செய்து முடிந்தவரை பிரதிபலன் எதிர்பார்க்காமல் அக்கறை காட்டுங்கள் .
22 . ஒரு செயலுக்கு வெற்றியோ தெளிவான முடிவோ கிடைக்கவில்லை எனில் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மறந்து விடுங்கள் . இறைவன் அருளால் கிடைக்கும்போது தானாக கிடைக்கும் என்று நம்புங்கள் .
23 . உங்களின் தேவைகள், வேலைகள் அன்றன்றே செய்து முடித்துவிட்டு , மண்ணிலே போட்ட விதை முளைக்கும் வரை காத்திருப்பது போல காத்திருங்கள் .
24 .நேரம் வாழ்க்கையில் பொன் போன்றது .அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும் .மழை பெய்யும் போது குடை பிடிப்பதைப் போல.
25 .எப்போதும் மனதில் நல்லதையே நினையுங்கள் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்
நல்லதே நடக்கும் .

No comments:

Post a Comment