Friday 1 September 2023

பாராட்டி மகிழ்வோம்.

 பாராட்டி மகிழ்வோம்.

தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்த தாயை பற்றி கேள்விப்பட்ட பிரதமர் அம்மா அப்பாவுடன் பிரதமர் அலுவலகத்திற்கு பிரக்ஞானந்தாவை அழைத்து வாருங்கள் என்று கூறி இருக்கிறார்
மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்டகால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன.
போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை...
பயிற்சிக்கே வசதியற்ற குடும்பம்,
பெரும் செல்வம், செல்வாக்கு, பின்னணி எதுவும் இல்லை,
மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த பையனை மேலும் மேலும் முன்னேற்ற ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் ஸ்பான்சருக்காக அலைந்து திரிந்த அந்த அன்னையின் அலைச்சலைப் பலமுறை பார்த்திருக்கலாம்
அத்தனை அலைச்சல்களிலும் ஒருநாளும் மனதை தளரவிடாது விடாப்பிடியாக இருந்தார்.
ஒதுக்கி விட்டார்கள்,
பிதுங்கி விட்டார்கள் என்று தாழ்வுமனப்பான்மையில் உளரவில்லை...
தமிழர் இந்திக்காரர் என்ற பாகுபாடு இல்லை, தமிழ் இனம் எனக்கே
முன்னுரிமை வேண்டும் என இன உணர்வு கூப்பாடு போடவில்லை...
வாய்ப்புகளை அடைய எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருந்தார்.
ஒரே குறிக்கோள்
தன் மகனின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு திட்டமிட்டு எல்லோரையும் சந்தித்து மகனை உயர்த்த தன்னை முழுவதுமாக சதுரங்கத்துக்கு ஒப்புகொடுத்தார்.
எந்த சூழலிலும் பதட்டப்படவில்லை,
நீட் தகுதி தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரல் இடுவது போல் சதுரங்க தகுதி சுற்றுக்கு
தடை கோரி தமிழனுக்கு
தனி உரிமை கேட்கவில்லை.
உள்ளூர் சாதனை,
அகில இந்திய சாதனை,
அகில உலக சாதனை,
உலகில் உச்சத்தில்
உள்ள அனைத்து சதுரங்க
வீரர்களையும் அசால்டாக
வெற்றி கொண்டு,
அதே புன்னகையுடன்,
அதே விபூதி பொட்டுடன்,
அதே வெள்ளந்தி அமைதியுடன்,
அதே எளிய உருவத்துடன் உள்ள தாயுடன் உலகை
வென்று தேசத்துக்கு பெருமை
சேர்த்து வரும்பிரக்ஞானந்தா தாயே உயர்ந்த பெண்மணி
இன்று மகன் மிக பெரிய உயரத்தை எட்டி இருக்கிறான். பிரக்யானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது.
சந்திரியான் இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் குழுவின் மாபெரும் உலகமகா வெற்றி போலவே,
இதுவரை இவன் பெற்ற தனிமனித வெற்றியும், சமீபத்திய சமதள நிகழ்வுகள் ஆகும்
தமிழகம் மட்டுமின்றி
நம் பாரத தேசமே,
ஏன் உலகமே கொண்டாட
வேண்டிய மாணவன்.





No comments:

Post a Comment