Thursday 14 September 2023

எதிலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

 எதிலும் எப்போதும்

கவனமாக இருக்க வேண்டும்.
சிந்தனை என்பது முழுமையான அறிவாற்றல் செயல்பாடு.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கும்,
நம் மூளையை உணர்வுபூர்வமாகப் பயன்படுத்துவதற்கும்
சிந்தனை உதவுகிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், சூழ்நிலையிலும், நல்ல சிந்தனை பலனளிக்கிறது.
அதே தவறான சிந்தனையாக
இருந்தால் வாழ்விலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலும் சரி சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது. ஒரு தவறான சிந்தனையினால், தவறான முடிவு எடுக்கப்படுகிறது. அது நமக்குத் தீராத வேதனையையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் நேரத்தையும் சக்தியையும் கூட வீணாக்குகிறது. தவறான சிந்தனையால்
விரக்தி, மன வலி ஏற்படுகிறது.
நாம் தினமும் பல செய்திகளைக் கேட்கிறோம், காட்சிகளைப் பார்க்கிறோம்.
நம்மைச் சுற்றி உள்ள தகவல்
தொடர்புகள் வழியாக ஒவ்வொரு நொடியும் தகவல்கள் நம்மை நோக்கிப்
பாய்கின்றன.
முகநுால்,
தொலைக்காட்சி, செய்தித்தாள் மூலம் நாம் பல விஷயங்களைப் படிக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம். ஆகவே நாம் எதைப் பார்க்கிறோம், கேட்கிறோம், எதை நம்புகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் பெறும் தகவல்களைப் புரிந்துகொள்வதற்கும், ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பதற்கும், தகவல்களை விமர்சன சிந்தனையுடன் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் வாழ்வில்,
சிந்தனை பெரிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்தால்,
நம் எண்ணங்களின் அடித் தளமே சிந்தனை தான் என்று உணர்ந்தால், நம் செயல்களை வழி நடத்துவதே
சிந்தனை தான் என்று உணர்ந்தால், சிந்தனையின் முக்கியத்துவத்தை உணர்வோம்.

No comments:

Post a Comment