Thursday 21 September 2023

உடல் பலம் மன பலம் . .

 உடல் பலம் மன பலம் . .

*அறிவு என்பது
படிப்பறிவைச் சார்ந்து இல்லை.
நமக்கு கிடைத்த அனுபவத்தையும், சூழ்நிலையும் வைத்து
எதிர்காலத்தை கையாளும்
தன்மைக்குப் பெயர்தான் அறிவாகும்.*
*சில சமயங்களில் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்வதை விட, நீங்கள் எதைச் செய்யும் முன்னரும் அதனால் கிடைக்கப் பெறும் நன்மையையும்
தீமையையும்
சிந்தனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கான சிறந்த முடிவை
நீங்களே அறிந்து கொள்வீர்கள்.*
*தோல்வியும் துன்பமும்
உங்களிடம் வரும் போது தனியாக வருவதில்லை.
கூடவே "மனவலிமையையும்"
அழைத்து வருகின்றது என்பதை மறவாதீர்கள்.*
*சரியாக வாழ கற்றுக் கொடுக்கின்ற*
*ஒவ்வொரு வலியும்
மிகச்சிறந்த ஆசானே.*
*ஒரு மனிதனை மகிழ்ச்சியாக
மாற்றக்கூடியது அவனது
செல்வமோ
பொருளோ அல்ல.*
*எப்போதும்
உடலாலும்
மனதாலும்
மகிழ்ந்து எது வந்தாலும்
ஏற்றுக் கொள்ளும்
பக்குவமும்தான் ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றும்.*
*அந்த மகிழ்ச்சியால் தான்
வாழ்க்கை வளமாகும்.*
*உடல் பலம் என்பது
ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் உடனிருக்கும் .*
*மனபலம்
என்பது மனிதன்
மண்ணுக்குள் மறையும் வரை உடனிருக்கும்.*
*எந்தவொரு சூழ்நிலையிலும்
உடல் பலத்தைக்
காட்ட முற்படாதே
மனபலத்தை
வெளிப்படுத்த முற்படு.*

No comments:

Post a Comment