Saturday 9 September 2023

நமது தனித்துவம் .

 நமது தனித்துவம் .

ஒரு மனிதன் எப்போது தன் தனித்துவத்தை இழக்கிறான்.
நாலு பேருக்காக வாழும் போது.
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, நாலு பேரு நம்பளப் பத்தி என்ன நினைப்பாங்களோ என வாழ ஆரம்பிக்கும் போது .
மனிதன் தன்
தனித்துவத்தை இழக்கிறான்.
உண்மையிலே அந்த நாலு பேர், நாலு நிமிஷத்தைத் தாண்டி நம்மளப் பத்தி நினைக்கபோறதில்ல.
காரணம், இங்க அவனவன் பிரச்சனையே அவ்வளவு இருக்கு, அதுக்கு இடைல அடுத்தவனப் பத்தி அதிக நேரம் நினைக்க
இங்க யாருக்கும் நேரம் இல்ல.
ஆக, அந்த நாலு நிமிஷ பேச்சுக்காக நம்மளோட தனித்தன்மையை எதுக்கு இழக்கணும்.
அந்த நாலு நிமிஷ பேச்சுக்காக
நம்ப ஆசை, கனவுகளை
எதுக்கு இழக்கணும்.
இது நம்ப புத்திக்கு தெரியும்,
ஆனா மனசுக்குத் தெரியாது. மனசுக்கு தெரிறப்போ நம்ப வாழ்க்கை அல்மோஸ்ட் கிளைமாக்ஸ நெருங்கி இருக்கும்.
அடுத்தவன் என்ன நினைப்பான்
என யோசிக்காம,
மனசுக்கு பிடிச்சதை செய்றவன் மட்டும் தான் வாழ்க்கைல ஜெயிப்பான்.

No comments:

Post a Comment