Monday 25 September 2023

அரிமா ஜெயின்ட் மண்டலம் தலைமைப் பண்பு பயிலரங்கம்.

 அரிமா ஜெயின்ட் மண்டலம்

தலைமைப் பண்பு பயிலரங்கம்.
இன்று மாலை திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் அருகில் உள்ள பிரம்மாண்டமான ஹரீஸ் ரெஸ்டாரண்ட் குளிரூட்டப்பட்ட மாநாட்டு அரங்கில் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பணி மேன்மை பெற தலைமைப் பண்பு பயிலரங்கம் ஜெயின்ட் மண்டலத் தலைவர் பொறியாளர் சி. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர் பொறியாளர் கிரியேட்டிவ் பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
பேசும் கலை என்ற தலைப்பில்
பேச்சு என்பது மேடைக்கு மட்டுமல்ல வாழ்வின் மேன்மைக்கு மற்றும் நமது தொழில், குடும்பம், பொது அமைப்பு, என அனைத்து நிலைகளிலும் நமக்கு உதவிடும் கலை.
நகைச்சுவை, கவிதை, இலக்கியம், நம்பிக்கை என சுவைபட கலந்து பேசுவது பேரின்பம்.
சபை அறிந்து, நேரம் அறிந்து பேசுதல் சிறப்பானது.
பல்வேறு சுவையான செய்திகளை மேற்கோள் காட்டி 69 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார்.
முதல் நிலை துணை ஆளுநர்
டாக்டர் ஏ. சசிகுமார்,
மண்டலம் 1 பி. ராஜசேகரன் ,மண்டலம் 2 எம். ஜெயபாலகிருஷ்ணன், மண்டலம் 3 ஏ. பாலாஜி, மண்டலம் 4 எஸ். ரஞ்சித்குமார், மண்டலம் 5 எஸ். ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஏராளமான கிளை நிர்வாகிகள் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.
மிகச்சிறந்த ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சி. மணிகண்டன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சிறப்பான உணவு ஏற்பாடு, மிக நேர்த்தியான அரங்கில் சிறந்த டிஜிட்டல் மைக் என அனைத்தும் அற்புதம்.
மாவட்ட ஆளுநர் கிரியேட்டிவ் பி. ராதாகிருஷ்ணன்
சிறந்த செயல்பாடுகள் மற்றும்
அரசுப் பள்ளிகளில்
கழிவறைகள் அமைக்க உதவுதல் மற்றும் நேர நிர்வாகம், சுய அறிமுகம் உள்ளிட்ட பல பணிகளை விளக்கினார்.
வாழிய அரிமா பணி வாழியவே.





























No comments:

Post a Comment