Monday 25 September 2023

ஒரு நேர்மையான மனிதனை கட்சிக்கு தலைவராக்கியதால் ..

 


ஒரு நேர்மையான மனிதனை கட்சிக்கு தலைவராக்கியதால் ..

தங்களால் வருங்காலத்தில் ஏதும் ஊழல் செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சம் கொள்ளும் சொந்த கட்சிக்காரா்கள் ஒரு பக்கம் !!
ஏற்கனவே செய்த ஊழலை இவர் அம்பலப்படுத்த தயங்கமாட்டார் என்ற பயத்தில் கூட்டணி கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்!!
இன்னாருபுறம் தமிழகத்தை முழுவதும் சுரண்டமுடியாமல் தவிக்கும் எதிா்கட்சிகள்..!
இந்த மூவருக்கும் இடையில்..
தனிமனித ஒழுக்கத்திலும், பொது வாழ்விலும்,
ஒரு நேர்மையான திமிரான மனிதனாய் திகழ்வதே சிறப்புதான்!
அந்த திமிரான மனிதரை ஆதரிப்பதும் ஒரு #கர்வம் தான்.!
அரசியலை புரிந்த சிலர் வைக்கும் வாதம்!
அண்ணாமலையின் நேர்மை மீதெல்லாம் எங்களுக்கு சந்தேகமில்லை!.
அவர் பணியாற்றிய துறையில் அவர் நேர்மையாளராக விளங்கி இருக்கலாம்.
ஆனால் ,
அரசியல் என வரும்போது அவர் சிலவற்றை புரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல் இலக்கணமே வேறு. சிலவற்றை அவர் கட்டாயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியலில் நேர்மையை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள்.
இதே வாசகத்தை தூக்கிக் கொண்டுதான் மூத்த அமைச்சர்கள் என்ற அடையாளத்தோடு சில கரைப்படியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.
டெல்லி தலைமை அவ்வளவு சீக்கிரம் இவர்கள் கோரிக்கைக்கு செவிச்சாய்க்காது. மாறாக அரசியல் கணக்கு, அரசியல் சாணக்கியத்தனம் என ஏதாவது ஒரு புள்ளியில் இவர்கள் கோரிக்கையை ஏற்று டெல்லி பாஜக தலைமை முடிவெடுக்குமானால்!
தமிழகத்தில் பாஜக ஆட்சி என்பது கேள்விக்குறியாகும்!.
அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் செல்வதற்கு காரணமே...
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, சமரசம் இல்லாத கொள்கை பிடிப்பு ஆகியவைதான்.
இதை யாருக்காகவும் அண்ணாமலை கைவிடுவதாகவும் தெரியவில்லை!
இந்த அண்ணாமலையை தேடிவந்திருக்கும் இளைஞர்களும் அவரை கைவிடுவதாகவும் இல்லை.
அரசியலின் முக்கியமான காலக்கட்டத்தில் அண்ணாமலை!
அந்த அண்ணாமலை துணையிருக்க!
இந்த அண்ணாமலையின் அரசியல் வாழ்வில்
என்றும் ஏறுமுகமே!
கடைசியாக ஒரு உண்மை!!
இந்த அண்ணாமலை எனும் சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருப்பதே திரு மோடிஜி எனும் ஒப்பற்ற தலைவனும், இந்திய அரசியலின் சாணக்கியன் திரு அமித்ஷா அவர்களும் தான் .
இது தெரியாம இங்கே சிலா்.. அண்ணாமலையை நீக்க சொல்லி அவர்களிடமே கோரிக்கை வைக்க இருக்கிறார்களாம்....!? பகிர்வு




No comments:

Post a Comment