Wednesday 20 September 2023

முறைப்படுத்தும் முறை . .

 முறைப்படுத்தும் முறை . .

"எண்ணிய
முடிதல் வேண்டும்.
நல்லவை
எண்ணல் வேண்டும்"
என்கிறார் நமதருமை முண்டாசுக் கவி.
"எண்ணம் போல் வாழ்வு"
என்பது புகழ்பெற்ற சொலவடை.
எண்ணங்கள் தான்
உயிரினங்களின் உந்து சக்தி.
அவை நல்லவைகளாக இருந்தால் உயர்கிறோம். அல்லவைகளாக இருந்தால் தாழ்கிறோம்.
ஆனால் அதே எண்ணங்கள்
நம்மைச் சிறைப்படுத்த
அனுமதிக்கக் கூடாது.
அதற்கு அவற்றை முறைப்படுத்த வேண்டும்.
நினைக்கவே கூடாது என்று எதைப் பற்றி எண்ணுகிறோமோ அதுதான் மனதில் மேடை போட்டு அமர்ந்து கொண்டு உங்களை எப்போதும்
ஆட்சி செய்து கொண்டே இருக்கும்" என்கிறார்கள் உளவியலாளர்கள்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்.. எண்ணியர் திண்ணி யராகப் பெறின்" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அத்தகைய எண்ணங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து திண்ணியராக ஆவதற்கு முறையான யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் உதவு‌கின்றன.
மூச்சுக்கும் எண்ணங்களுக்கும்
இடையே ஓர் இடையறாத தொடர்பு இருக்கிறது. அதனால்தான் மூச்சைப் போலவே எண்ணங்களையும் நம்மால் நிறுத்த இயலுவதில்லை. ஆனால் மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் எண்ணங்களைச்
சீரமைத்துவிட முடியும்.
*இறைவழிபாடும்
அவற்றை நல்வழிப்படுத்தும்.*
அதோடு உங்கள் வேலைகளில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்குங்கள். அப்போது உங்கள் எண்ணங்கள் அவற்றை நல்லபடியாக முடிப்பதில் மட்டுமே கவனமாக இருப்பதை நாளடைவில் உணர்வீர்கள்.
வாழ்வில்
உயர்ந்த எண்ணங்களை
இடம் பெறச் செய்யும்
நல்ல புத்தகங்களைப் படிக்கத் தொடங்குங்கள்.
*நல்ல எண்ணங்களே
நல்ல வழிகாட்டிகள்*

No comments:

Post a Comment