Wednesday 6 September 2023

*காலை தரிசனம் !* *கண்ணன் தரிசனம் !!*

 *காலை தரிசனம் !*

*கண்ணன் தரிசனம் !!*
"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு..!
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு..!
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்..!
பரந்தாமன் சன்னதிக்கு
வாராய் நெஞ்சே...!!
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்..!
இன்று
ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி !
இன்று
கோகுலாஷ்டமி !
இன்று
வைகானச முனித்திராய ஸ்ரீ ஜெயந்தி !!
இன்று
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விரதம் !
திதியை அடிப்படையாக கொண்டு... ஆவணி மாத தேய்பிறை
அஷ்டமியை...
கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் வழக்கம் வைகாசன(கிருஷ்ணர்)
ஸ்ரீ ஜெயந்தி.. அது இன்று..!!
நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு..
ஆவணி மாத தேய்பிறை கால
ரோகிணி நட்சத்திரத்தை...
கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் வழக்கம் பாஞ்சராத்ர (கிருஷ்ணர்) ஜெயந்தி அது நாளை..!!
இப்படி இரண்டு நாட்கள் கொண்டாடும் வழக்கம் தொன்று தொட்டே அமைந்துள்ளது !!
இன்று
அவரவர் வழக்கப்படி,கிருஷ்ணனை,
கண்ணனை,பகவானை பரந்தாமனை,
பெருமாளை வழிபட வேண்டிய நாள் !!
*கண்ணன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*
*அனைத்து அன்பர்களுக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் !*
*பரந்தாமன் அருளாளே*
*வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment