Wednesday 6 September 2023

கற்றுக்கொள்ளும் கலை . .

 கற்றுக்கொள்ளும் கலை . .

*கனவுகள்
மெய்ப்பட வேண்டுமெனில்.*
*விழித்தெழுந்து அதற்காக
உழைக்க வேண்டும்!*
*உழைப்பே உயர்வு*
*வாழ்க்கையில், கற்றது கை மண்ணளவு.*
*கல்லாதது உலகளவு.*
*என்பது முன்னோர் வாக்கு.
வாழ்க்கையில் எப்பொழுதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்போம். *
*தெரியாததைத் தெரிந்து கொள்வோம்.*
*நேர்மையுடன் செயல்படுவோம்.*
*தன்னைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க முடியாத எந்த மனிதனும்.*
*உயர்ந்ததாகச் சரித்திரம் இல்லை*
*வாழ்க்கையில் எது நடந்தாலும்*
நமக்காகத்தான்*
*நம்முடைய நன்மைக்காகத்தான்
என்று நினைத்துப் பாருங்கள்.*
*நம்முடன் மகிழ்ச்சியும்
புன்னகையும் போகாமல் இருக்கும்*
*பலவீனமான,எந்த முகவரியும்
அற்றவர்களிடம் நாம் காட்டும் முகமே.*
*நமது உண்மையான முகம்.*
*எவ்வளவு
நம்பிக்கை வைத்தாலும்.*
*துரோகம் முளைக்காத இடங்கள்
இரண்டு
தான்.*
*ஒன்று*
தாயின் மடி....*
*இரண்டு*
இறைவன் அடி.*
*பதிலுக்கு ஏற்றார் போல் அடுத்த கேள்வியை மாற்றிக் கொள்ளுங்கள்
மரியாதை பெருகும்.*
*பொய் சொல்லிக்
குடிக்கும்
பாயாசத்தை விட*
*உண்மையைப் பேசி
அருந்தும்
பச்சைத் தண்ணீர் மேல். *
*இறையருளை விட மிகப் பெரிய செல்வம் உலகில் எதுவும் இல்லை.*
*இறையருள் என்ற ஒரு செல்வம் உங்களுடன் இருந்தால்
மற்ற அனைத்துச் செல்வங்களும் உங்களைத் தேடி வரும்.*
*உண்மையில்
மற்ற எதுவும் பெரிதாக தெரியாது.*
*ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது
இறையருளுடன் தொடங்குங்கள்.*
*நிச்சயம் உங்கள் நாட்கள் மிகச் சிறப்பாக இருக்கும். *
*இறையருளால் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அடைந்து மிகச் சிறப்பான அழகான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துகள். *

No comments:

Post a Comment