Thursday 7 September 2023

இரைச்சலும் ஆழ்கடலும் . .

 இரைச்சலும் ஆழ்கடலும் . .

*இங்கு, வாசனை என்பது,
சில நிமிடங்கள் வரைதான் நிலைத்திருக்கும்.*
*வலிமை என்பதும்,
சில காலம் வரைதான் இருக்கும்.*
*அழகு என்பதும்,
இளமை உள்ளவரைதான் இருக்கும்.*
*ஆனால்,
நல்ல உறவு என்பதோ,
உயிர் உள்ளவரை,
நிலைத்து நிற்கும்.*
*பணத்துக்காக மட்டுமே
ஒரு செயலைச் செய்தவர்கள்.*
*மன நிறைவை எப்பொழுதும்
பெறுவதே இல்லை. *
*வேண்டியது வேண்டாதது
என எதுவும் இல்லை இவ்வுலகில்.*
*காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவையானது.*
*காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை. *
*கறை இல்லாத
இதயம் தான்.*
*கலக்கமில்லாத
அமைதியைத்
தரவல்லது*
*ஆழமில்லாத தண்ணீர்
பரப்பிலிருந்துதான்
இரைச்சல் எழும்.*
*ஆழ்கடல் எப்போதும்
பேரமைதியாகவே இருக்கும்.*
*யாருடைய
உரிமையையும்
பறிக்காமலும்
தன்னுடைய
உரிமையை
விட்டுக் கொடுக்காமலும்*
*வாழ்வதே
தன்மானம் என்பதாகும்.*
*மனதில் பட்டதைப்
பேசி விடுவேன் என்று,*
*பிறர் மனதைப் புரிந்து
கொள்ளாமல் இங்கிதம்
இன்றிப் பேசுபவர்கள்
இடுகாட்டுப் பிணங்களே.*
*எத்தனை பெரிய
மனிதனையும்
வீழ்த்திடும்*
*இரு குணங்கள்,*
*"கர்வமும்,*
*தலைக் கனமும்"*
*எத்தனைப் பெரிய
உறவையும்
வீழ்த்திடும்*
*இரு குணங்கள்,*
*"பொய்யும்,*
*சந்தேகமும்"*
*ஊக்கமும்
வலிமையும்
இருந்தால்தான்
வாழ்க்கை இன்பமாக இருக்கும்.*
*இன்னலின் இடுக்கில்
ஒடுங்கி விடாதே. *
*இடையூறு கண்டு
பயந்து விடாதே. *
*துன்பத்தைக் கண்டு
துவண்டு விடாதே. *
*தீயவை கண்டு
ஒதுங்கி விடாதே. *
*தடைகளைத் தகர்த்தெறி
தானாக மார்க்கமுண்டாகும்.*
*ஒன்றின் அந்தமே
பிரிதொன்றின் ஆரம்பம். *
*மறவாதே மனிதா பூமிக்கும்
சாமிக்கும் துன்பம் புதிதா. *

No comments:

Post a Comment