Friday 8 September 2023

தீவிர ஆசை . .

 தீவிர ஆசை . .

நம்முடைய கனவு மற்றும்
கற்பனைக்குத் தெளிவான செயல் வடிவம் கொடுக்கும் போது
குறிக்கோள் ஆகிறது.*
நமக்கான குறிக்கோள் ஒன்றை வகுத்துக் கொண்டு அந்த இலக்கை அடைய நாம் வழி காண வேண்டும்.*
`ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டு இருப்பது வெறும் கனவாகத் தான் இருக்கும்;
அந்தக் கனவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்..*
நம் இலக்குகளில் இருந்து பின்னோக்கி நகர்த்த பல இடையூறுகள் வர நேரிடும். நம் கனவுகளையும் சாத்தியமாக்க முடியாமல் போகும்*
குறிக்கோளற்ற வாழ்க்கை,
நூலறுந்த பட்டம் போல,
துடுப்பு இழந்த படகு போல,
எந்தத் திசையில் வேண்டும் என்றாலும் செல்லலாம்.
ஆனால், ஆசைப்படும்
இலக்கை அடைய இயலாது.*
''என் குறிக்கோள் இது தான்'
என நமக்கு நாமே பிரகடனம் செய்யும் போது, அதை அடைவதில் முனைப்பும், மன உறுதியும் பிறக்கும்*
விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு, பல நூறு மைல்கள் தூக்கிச் செல்ல, ராக்கெட்டில் உள்ள எரிசக்தியைப் பயன்படுத்துவது போல,*
நம் குறிக்கோளை அடைவதற்கு உந்து சக்தியாக இருப்பது, அதன் மேல் வைத்து இருக்கும் தீவிர ஆசை தான்.*
குறிக்கோளின் மீது நீங்கள் வைத்திருக்கும் ஆசை, உங்களை ஓய்வெடுக்க விடாது,
உறங்க விடாது.
நீங்கள் எடுக்கும் முயற்சியில்
அலுப்புத் தட்ட விடாது.*
எத்தனை மணி நேரம் உழைத்தாலும் சோர்வடைய விடாது.
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அவமானப்படுத்தினாலும், இளக்காரமாகப் பேசினாலும் மனதைத் தளர விடாது.*
கனவுகளை சாதித்துக் காட்டிய பல சாதனையாளர்கள் இந்த உலகை இன்னும் ஆண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் வார்த்தைகளும், செயல்களுமே நமக்கு எப்போதும் உந்துதல் சக்தி ஆகும்.*
அப்படி உங்களை ஈர்த்த தலைவர்கள், சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.*
அவர்களின் உழைப்பு,
துயரங்கள்,
பொறுமை,
அவமானம்,
இறுதியில் அவர்கள் எட்டிய வெற்றி போன்ற விதம் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.*
சோர்வாக இருக்கும் போது, அவர்களின் சாதனைகள், கடந்து வந்த பாதைகளை ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.*
*“நமது வாழ்வில் வெற்றி பெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அதை அடைய வேண்டும் என்ற தாளாத ஆர்வமும் இருக்க வேண்டும்.*
*எந்தச் செயலும், நம்மால் உறுதியாகச் செய்ய முடியும் என்று நம்முடைய மனதில் மேலோங்கி நிற்க வேண்டும்.*
*அந்த நம்பிக்கை தான்
''குறிக்கோளின் வெற்றி''யை
நம் வசமாக்கும்’’*

No comments:

Post a Comment