Tuesday 19 September 2023

வெள்ளை மனம் . .

 வெள்ளை மனம் . .

உலகத்தில் பல நூறு கோடி பேர் இருக்கிறார்கள். யாரோ சிலரிடம் சரியாக நடந்து கொண்டு (நல்லவனாக) விட்டு எல்லோரிடமும் நான் சரியாக(நல்லவனாக) நடந்து கொண்டேன் என்றால் எப்படி
இன்னும் நல்லவனாக,
எல்லோரிடமும்,
நீங்கள் மாற வேண்டும் உயர வேண்டும்.
கொடுக்கக் கொடுக்க கொடுத்துக் கொண்டே இருந்து- கடுகளவும் சுயநலமற்ற தன்மை உடையவன் மனிதருள் மாணிக்கம்.
அவனே வள்ளல்.
கற்றது கைமண் அளவு
கல்லாதது உலகளவு என இத்தத்துவம் அறிந்து இருப்பவனே சான்றோன்.
வென்றால் பெருமை,
தோற்றால் வேதனை என்று;
அன்றும் இன்றும் என்றுமே தட்டிக் கொடுத்து வாழ வைப்பவன் நண்பன்.
அற்ப சுகத்தைத் துறந்து
பிறர் அகம் மகிழ வாழ்ந்து
நற்பணியே கதியென நாநிலம்
போற்ற வாழ்பவன் ஞானி.
அஞ்சாது மனம் கோணாது கண்மூடி திறக்கும் முன்னே பிறருக்கு தன்னைத் தந்தும், நன்மை செய்தும், அவர் நலனுக்காக இருப்பவன் தியாகி.
பண்போடும் நற்பணிவோடும் தலைகுனியாமல் தன் தரம் குறையாமல் என்னாலும், எவர்க்கும்,-இடர் வாராது என பிற உயிர்களைக் காத்து நிற்பவன் வீரன்.
வெள்ளை மனமும் சிறு பிள்ளை குணமும் உள்ள மனிதன் எவனோ அவனே உண்மையான புனிதன்.
நாட்டின் நலனே தன் நலனாய் என்றெண்ணி-எந்நாளும் உழைத்து வறுமையில் வாடும் மக்களின்
துயரைத் துடைத்தெறிபவன்
அவன் தான் தலைவன்.
உழைத்து உழைத்து நொந்த_தன் உடலை தேற்ற மறந்து தன் கடமையே பெரிதென்று எண்ணி இரவும் பகலும் விழித்திருப்பானே
அவன் தான் காவலன்.
உத்தமன், உயர்ந்தவன், சிறந்தவன், தலை நிமிர்ந்தவன், மானஸ்தன், என்று இப்படி நூறு வித நல்ல மனிதர்களின்-குண பாவங்களை சொல்லலாம் சார். நீங்கள் இவர்களில் ஒருவராக, நல்லவராக வாழ வாழ்த்துகள்.
*நல்லவனாக இருப்பது என்பது கஷ்டமாக இருந்தாலும் அதுதான் போற்றுதலுக்கு உரிய பண்பு. *

No comments:

Post a Comment