Monday 4 September 2023

மருந்தாகவும் விதையாகவும் . .

 மருந்தாகவும் விதையாகவும் . .

*தூக்கம்
மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே
அவரை எப்போதும் விழிப்பு உடையவராக இருக்கச் செய்யும்.*
*ஆழ்ந்த தூக்கம் தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.*
*இந்தத் தூக்கம் தான்
உடலில் மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடையப் பெரிதும் உதவுகிறது.*
*அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.*
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களைப் பலப்படுத்துகிறது.*
*மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது சரியில்லாமல் போனாலும் முதலில் பறிபோவது தூக்கம் தான்.*
*தூக்கம் என்பது மனிதர்களுக்கு
மிகவும் அவசியமான ஒன்று.
ஒரு நாளின் வெற்றி என்பது அதற்கு முந்தைய இரவில் நாம் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதைப் பொருத்தே அமைகிறது.*
*இரவு சரியாக தூங்கவில்லையெனில் அடுத்த நாள் முழுவதும்
பதட்டத்துடனும், கோபத்துடனும் பெரும்பாலானவர்களுக்கு
அந்த நாள் செல்கிறது.*
*அன்றைய நாளின் சோர்வுக்கு மருந்தாகவும், அடுத்த நாள் வேலைக்கு விதையாகவும் இருப்பது நிம்மதியான தூக்கம் தான்.*
*தூக்கம் போனாலே
நிம்மதி போய் விடும்.
ஆரோக்கியம் போய் விடும்.*
*இன்றும் லட்சக்கணக்கானோர் தூக்கத்தைத் தொலைத்த
வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.*
*நிம்மதியான ஆழ்ந்த
தூக்கத்திற்குப் பல வழிமுறைகள் உள்ளன.
அவை.*
*இரவு தூக்கம் தான் நல்லது.
பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம்.
ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது.*
*மனித ஆரோக்கியத்தையே ஆட்டிப் பார்க்கும் தூக்கத்தைப் பெற முறையான உணவும், உடற்பயிற்சியும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.*
*நிம்மதியான தூக்கத்தைப் பெற நினைப்பவர்கள், அமைதியான, காற்று வசதி நன்கு கொண்ட
அறையில் தூங்க வேண்டும்.*
*மெத்தை மற்றும் தலையணைகள் சரியான நிலையில் இருக்க வேண்டும். காலையில் எழும் போது முகுது வலி, கழுத்து வலி, உடல் வலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்கள் படுக்கை சரியில்லை என அர்த்தம்.*
*சத்தம் இல்லாத சுற்றுச்சூழலில் தூங்குவதும் முக்கியம். விளக்கு வெளிச்சத்தில் தூங்காமல், இருள் நிறைந்த அறையில் தூங்க வேண்டியது அவசியம்.*
*இரவு நேரத்தில் அதிக நீர் அருந்துவது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியது. தாகத்தால் தூக்கம் கெடாமலிருக்க தூங்குவதற்கு முன்னரே போதுமான அளவு தண்ணீர் குடித்து விட வேண்டும்.*
*அதே நேரம் இரவில் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள சிறுநீரை வெளியேற்ற நீங்கள் எழ வேண்டியிருக்கும்.*
*உடலின் கடிகாரத்தை முதலில் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள். நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.*
*முறையான நேரப்படி, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை
தொந்தரவு தீரும்.*
*மன அழுத்தையும் குறைக்க வேண்டும். இல்லை என்றால் தூக்கமின்மை தீராத துன்பத்தைக் கொண்டு வந்து சேர்த்து விடும்.*
*மனித வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம் தான். நாம் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது , இரவில் நாம் மேற்கொள்ளும்
ஆழமான தூக்கம் தான்.*
*உடலும் ,மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும்*
*களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வு தான் தூக்கம் என்பது.*
*எல்லாவற்றிற்கும் மேலாக
ஒழுக்கமும் , சுயகட்டுப்பாடும் இருக்கும் ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு ஆனந்தமான பயணம்.
இந்த ஆனந்தத்தினால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.*

No comments:

Post a Comment