Saturday 2 September 2023

ஏற்றுமதி வர்த்தகத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் பாரமவுண்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் நடத்திய பிரம்மாண்டமான விழா.

 ஏற்றுமதி வர்த்தகத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வரும்

பாரமவுண்ட் டெக்ஸ்டைல் மில்ஸ்
நடத்திய
பிரம்மாண்டமான விழா.
இன்று மாலை மதுரை திருமங்கலம் அருகில் உள்ள திரளி கிராமத்தில் 72 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன முறையில் செயல்படும் பாரமவுண்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் பி லிட் வளாகத்தில் மாநாடு போல நடைபெற்ற
சமூகப் பொறுப்புடைமை நாள் மற்றும் நியாய வர்த்தகம் நிகழ்ச்சி
ஆலைத் தலைவர் லட்சுமி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
45 ஆண்டுகள் முன்பு இது தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றைய வளர்ச்சி வரை எடுத்துக் கூறினார்.
நிர்வாக இயக்குநர் ராமு முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
ஆலையின் பல்வேறு சிறப்பினை பெரிய எல் இ டி திரையின் மூலம் காட்டினர்.
நியாய வர்த்தக குழு தலைவர்
யூ. சக்திவேல் விளக்க உரை ஆற்றினார்.
இதயம் நிறுவன குழும முதன்மை நிர்வாக இயக்குநர் விஆர். முத்து
விழா பேருரை ஆற்றினார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
தொழில் மேன்மையும் உழைப்பை மதித்தலும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ரோட்டரி ஆளுநர் தேர்வு பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி
வாழ்த்துரை வழங்கி ஆலைத் தொழிலாளர் சீனிவாசன் நினைவு விருதினை வழங்கினார்
நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்பு நிதி ரூ இருபது லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், ரூ ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம் மதிப்பிலான நுண்திறன் வகுப்பறை அமைத்திட ஆலைத் தலைவரும் நிர்வாக இயக்குநரும் வழங்கினர்.
மற்றும் நியாய வர்த்தகக் குழுவினரின் பரிசாக நிறுவன பணியாளர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தபால் துறை டெபாசிட் பரிசாக வழங்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மதுரை மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹனீப் தயூப் தலைமையில் ஏராளமான ரோட்டரி முன்னோடிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.




































































No comments:

Post a Comment