Monday 25 September 2023

சுலபமாகவும் கடினமாகவும் . .

 சுலபமாகவும் கடினமாகவும் . .

*மனம் தெளிவாகவும்
அமைதியாகவும்
தியானநிலையிலும்
இனிமையாகவும்
இருந்தால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயை அணுகவிடாது.*
*இன்பமும், துன்பமும் அதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளன.
எல்லா சூழ்நிலையும் ஆன்மீகப் பயிற்சிக்கு உகந்ததாகக் கருதி,
உங்கள் தியானத்திற்கு
பங்களிப்பதாகக் கொள்ள வேண்டும்.*
*தியானம்
கடினமான நேரங்களைக்
கடந்து செல்வதற்கான
மன வலிமையைத் தருகிறது. உங்களுக்குள் நீங்கள் ஆறுதலைக் கண்டு கொள்ள உதவுகிறது.*
*ஆசனங்கள்,
மூச்சுப்பயிற்சி,
தியானம்
ஆகியவற்றை அன்றாட வாழ்வின் அங்கமாக்கும் போது, ஒருவரின் உடல் வேதி மாற்றத்தை மட்டுமல்ல, மனதையும் அமைதியாகவும், நெகிழ்வுடனும் வைக்கும்.*
*நம் வாழ்க்கைப் பயணம்
சில நேரங்களில் சுலபமாகவும்
சில நேரங்களில் கடினமாகவும் இருக்கலாம்.*
*அனைத்தையும் கடந்து வர முயற்சி செய்யுங்கள்.*
*இறைவன் எப்பொழுதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்.*
*உங்கள் எண்ணங்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.*
*எண்ணும் எண்ணங்கள்
நல்லதாக இருந்தால்*
*நடக்கும் அனைத்தும்
நல்லதாகவே நடக்கும்.*
*நல்ல எண்ணங்கள் உள்ள உள்ளமே*
*இறைவன் வாழும் கோயில் ஆகும்.*
*உங்கள் உள்ளம்
கோவிலாவது உங்கள்
கைகளில்தான் இருக்கிறது.*
*எந்தச் சூழ்நிலையிலும்
சோர்ந்து விடாதீர்கள்.*
*நம் விதி மிகவும் வலிமையானது.*
*இறைவன் அதைவிட வலிமையானவர்.*
*இறைவனை நம்பி
உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.*
*என்றும் நல்லதையே எண்ணுங்கள்.*
*உங்களது
இன்றைய எண்ணங்கள்*
*நாளை
உங்கள் வாழ்வாக மாறும்.*

No comments:

Post a Comment