Monday 4 September 2023

மகிழ்ச்சி எனும் மனநிலை . . .

 மகிழ்ச்சி எனும் மனநிலை . . .

மகிழ்ச்சியாக இருப்பது என்றால்
பெரும்பாலும் பொருள் சார்ந்தவற்றையே மகிழ்ச்சிக்கான காரணமாகச் சொல்கிறார்கள்.
அதன் மகிழ்ச்சி மிகக்குறுகியது. முதல்முறை மட்டுமே உவகையளிப்பது.
வெற்றியின் இன்பம் இன்னும் தற்காலிகமானது, "வென்றேன்" என்ற கணத்திலேயே அது முடிந்துவிடும்.
புகழ், ஆதிக்கம், அதிகாரம் அளிக்கும் இன்பமோ அகங்காரத்தை குளிர்விக்கிறது.
ஆனால் அதற்கு விலையும் அளிக்க வேண்டியிருக்கும். தராசின் மறுதட்டில் மனக்கவலையையும், எரிச்சலையும் வைத்தாக வேண்டும்.
கேளிக்கை, சேவை போன்றவற்றினால் கிடைக்கும் மகிழ்ச்சியும் தற்காலிகமானதே. ஏதேனும் உடல்சோர்வோ, பிணக்கோ ஏற்பட்டால் மகிழ்ந்திருந்ததைக் காட்டிலும் மன அழுத்தம் உண்டாகும்.
மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மை மட்டுமே சார்ந்தது.
இன்னொருவர் அளிப்பது அல்ல.
மகிழ்ச்சிக்காக எவரையும், எதையும் நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை. எவர் தன்னளவில் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அவர்தான் உண்மையில் வாழ்கிறார்.
மகிழ்ச்சி தானாக நிகழவேண்டுமென நாம் நினைக்கிறோம். அதுவே நம்மில் வந்தமர்ந்து நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறோம்.
மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலையை நாமே பயின்று உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சின்னஞ்சிறு விஷயங்களில் உள்ளது மகிழ்ச்சி. அதை அறியும்படி நம் மனதை வைத்துக்கொண்டாலே போதுமானது.
மகிழ்ச்சி ஒரு பட்டாம்பூச்சி என்று பாவித்தாலும் நாம் மலராக இருந்தால் மட்டுமே பட்டாம்பூச்சி வந்து அமரும்.
நாம் ஒரு கல்லாக இருந்தால் கடந்து சென்றுவிடும்.
நீங்கள் எதற்கெல்லாம் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று
நீங்களே தேடிக் கண்டடையுங்கள்.

No comments:

Post a Comment