Saturday 30 September 2023

கவனச் சிதறல் . .

 கவனச் சிதறல் . .

ஞாபக மறதி என்பது
ஒரு விதத்தில் கொடை தான் என்றாலும்,அது அனைத்துக்கும் பொருந்தி வருவது இல்லை.*
பலரையும் பாதிப்பது
இந்த ஞாபக மறதி.
சரியான காரணத்தைக்
கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கிறனர் உளவியல் நிபுணர்கள்.*
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.*
*அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் அவசரமாகவும், படபடப்புடன் செய்வதால் மனம் நிம்மதியற்றுப் போகிறது.*
இந்தச் சூழலில் சாதாரண நிகழ்வுகள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டம் இடுவதன் மூலம் படபடப்பில் இருந்து விடுபட முடியும்.*
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமானதை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக மாற்றலாம்.*
அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்குக்
கொண்டு வர முடியும்..*
மறதிக்கு இன்னொரு முக்கியக் காரணம் கவனச் சிதறல் தான்
இதனால் முக்கியவற்றை நினைவில் பதியாமல் போய் விடுகிறது.*
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது மற்றும் எண்ணத்தை வேறு பக்கம் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாகக் கை விட வேண்டும்.*
இவர்கள் ஒரே நேரத்தில் ஒரே ஒரு வேலையில் முழுக் கவனம் செலுத்தினால் மறதியைத் தடுக்க முடியும். ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க மனப்பயிற்சியே அவசியமாகிறது.*
மனதை ஒரு நிலைப்படுத்திப் பழகும் பொழுது பயிற்சி காரணமாக
மனம் எந்த செயலைச் செய்கிறோமோ அதில் நிலைத்து இருக்கும்
ஆற்றலைப் பெற்று விடுகிறது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்துவதன் மூலமும்
மறதியை விரட்டி விடலாம்.*
அதிகாலையில் எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.*
இரத்தம் மூளைக்கு அதிகமாகப் பாயும் பொழுது, அதிலுள்ள ஆக்ஸிஜனை மூளை அதிகமாகப் பெற்றுக் கொள்கிறது.
இதுவே இயற்கை மின் சக்தியாகும்.*
எனவே அதிகாலையில் எழுவது,உடற்பயிற்சிகள் செய்வது,மூச்சுப் பயிற்சி போன்ற பழக்கங்களைத் தவறாமல்
செய்ய வேண்டும்.*
அவ்வாறாயின் அவர்கள் இயல்பாகவே நினைவாற்றல் உடையவர்களாக மாறி விடுவார்கள். மேலும் முதுமையிலும் மறதி என்பது அவர்களுக்கு ஏற்படாது.*
மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட
ஞாபக மறதியால் மிகவும்
அவதிப்பட்டு இருக்கிறார்கள்.*
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர்.
ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.*
டிக்கெட் பரிசோதகர் வந்து
பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.*
இதைக் கண்ட ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார்.*
தன் கைப்பையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார்.*
அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது.*
எனவே அவர்
'' நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல,
இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும்.*
எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.
எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள் என்றார்.''*
அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா *
''அதுவல்ல என் பிரச்சனை.
டிக்கெட் வேண்டும் என்றால் என்னால் இன்னொன்று கூட வாங்கிக் கொள்ள முடியும்.ஆனால்,
நான் எந்த ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன் என்பதை அந்த டிக்கெட்டைப் பார்த்தால் தானே
எனக்குத் தெரியும்.
இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தார்.*
*நினைவாற்றலை அதிகரிக்க
பயிற்சி அளிக்கலாம்.
புதிர் விளையாட்டு,
வார்த்தை விளையாட்டு
ஆகியவற்றில் ஈடுபடலாம்.*
*எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்..*
*நேரத்தையும், வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.*
*முக்கியமாக, மறதிக்காக
கவலைப்படக் கூடாது.
இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.*

No comments:

Post a Comment