Monday 25 September 2023

வாழும் முறை.

 வாழும் முறை.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
வாழும் முறை சார்ந்தது.
இதன் காரணமாக, குறைவாக சம்பாதிக்கும் நபர்கள் கூட, சிக்கனமாக வாழ்ந்து, பெரிய வளர்ச்சியை, முன்னேற்றத்தை அடைய முடியும்.
உதாரணமாக,
ரொனால்டு ரீட் என்ற பெட்ரோல் கிடங்கில் வேலை பார்த்தவர்,
துப்புரவுப் பணியாளராக வேலைபார்த்தவர்,
நல்ல சேமிப்பு மற்றும் முதலீட்டின் காரணமாக,
கோடீஸ்வரராக உருவானார்.
மேலும், 1.2 மில்லியன் அமெரிக்க டாலரை, ஒரு மருத்துவமனைக்கு வழங்கும் அளவிற்கு, ஈகை குணம் படைத்தவராக விளங்கினார்.
இதனைப் போலவே, ஏழையாக இருந்து, பணக்காரராக மாறிய பல்வேறு நபர்கள் உள்ளனர். அவர்கள் வாழும் முறையின் காரணமாக, உழைப்பின் காரணமாக, பெரும் பணக்காரர்கள் ஆகினர்.
உதாரணமாக, வீடற்றவராக இருந்த கிரிஸ் கார்ட்னர், பெரும் கோடீஸ்வரராக மாறினார். அவரைப் பற்றி,
"த பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ்" திரைப்படம் வெளியானது.
இதற்கு மாறாக, பொருளாதாரம் இருந்தபோதும், சரியாக வாழாத காரணத்தினால், வாழ்வில் வீழ்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
உதாரணமாக, டென்னிஸ் உலகில் முடிசூடா அரசனாக, பணத்தை குவித்த ஜான் போர்க், சரியாக பணத்தை கையாளாத காரணத்தினால், ஏழையானார்.
எனவே, வாழும் முறையின் மூலமே, ஒருவரின் முன்னேற்றம் முடிவாகிறது. எந்த ஒரு பணக்காரனும், சரியான முறையில் வாழாவிட்டால் ஆண்டி ஆகிவிடலாம்.
*வளர்ச்சி
மற்றும்
முன்னேற்றம்
வாழும் முறை சார்ந்ததே.*

No comments:

Post a Comment