Tuesday 5 September 2023

விட்டுக் கொடு அல்லது விட்டு விடு . .

 விட்டுக் கொடு அல்லது விட்டு விடு . .

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் 6 விஷயங்களை உடனடியாகச் செய்வதை நிறுத்வேண்டும்.
1.மற்றவர்களுடன்
ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
2.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவதை
நிறுத்த வேண்டும்.
3.தங்களிடம் இல்லாததைப் பற்றி
அதிக கவனம்செலுத்துவதை
நிறுத்த வேண்டும்.
4.மட்டுபடுத்தப்பட்ட, தங்களை கட்டுப்படுத்தும் நம்பிக்கைகளை
நிறுத்த வேண்டும்.
5.கடந்த காலம் / எதிர்காலம் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்.
6. தங்கள் மகிழ்ச்சியை வேறொருவரிடம் எதிர்பார்த்துக் காத்திருப்பதை
நிறுத்த வேண்டும்.
"நீங்கள் தவறான விஷயங்களைத் துரத்துவதை நிறுத்தும்போது, ​​சரியான விஷயங்களைப் பிடிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறீர்கள்.
" நாம் அனைவரும் கோபம், விரக்தி, ஊக்கம், கவலை மற்றும் இது போன்ற பல உணர்ச்சிகளை சில நேரங்களில் உணர்கிறோம். இந்த உணர்வுகள் மன அழுத்தம் தருபவை இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும். *
*வாழ்க்கையானது நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு.*
*அந்த நேரத்தைப் பயன்படுத்துவதும் வீண் அடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது.*
*எவரிடமும் விட்டுக் கொடு
ஆனால் உன்னை மதிக்கவில்லை என்றால்
அவர்களை விட்டு விடு.*
*உறவுகள் முக்கியம் தான் ஆனால் அதைவிட தன்மானம் முக்கியம்.*
*என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொள்வதை விட.*
*இவ்வளவுதான் வாழ்க்கை என்று சகித்துக் கொள்ளப் பழகு.*
*எவ்வளவு சோதனை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.*
*சூழ்நிலைகள் கடினமாக இருந்தாலும் சேர்ந்து விடாதீர்கள்.*
*உங்கள் புண்ணியக் கணக்கு
சரியாக இருந்தால் யாரோ ஒருவர் மூலம் உதவி கிடைக்கும்.*
*இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களைக் காக்க வந்து நிற்பார்.*

No comments:

Post a Comment